பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 89.

பாடிய திருப்பதிகங்களையும் பதினேராம் திருமுறையாக வகுத்தார்கள். நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடினர். அவர் பாடிய அதுவும் பிற பாடல்களும் மன்னனுடைய வேண்டுகோளால் பதினேராங் திருமுறையில் சேர்க்கப்பெற்றன.

பிறகு இறைவன் அருட்குறிப்பை உணர்ந்து தேவாரத்துக்குப் பண்களே அமைக்க எண்ணினர்கள். இறைவன், 'திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணிக்கு இவற்றின் பண்களே அறியும் ஆற்றலே வழங்கியிருக்கிருேம்" என்று அருள, அவர்கள் திரு. எருக்கத்தம்புலியூர் சென்று அப் பெண்மணியைக் கண்டார்கள். அப் பெருமாட்டியைத் திருத்தில்லைக்கு அழைத்து வந்து அம்பலவாணர் சக்கிதியில் இசை வகுக்கும்படி வேண்டினர்கள். அப்பெருமாட்டி காட்டிய படியே பண்களே அடைவாக வகுத்தார்கள்.

அது முதல் மீண்டும் தேவாரப்பதிகங்களே அவற்றிற் குரிய பண்ணுேடு பாடும் வழக்கம் உண்டாயிற்று. அறுபத்து மூவருடைய பெருமையையும் மக்கள் எண்ணி வழிபட்டனர். திருமுறைகளைத் தொகுப்பதற்குக் காரண மாக இருந்த முதல் இராசராசனேத் திருமுறை கண்ட சோழன் என்று அறிஞர் பாராட்டுவர். அவன் வாழ்ந்த காலம் கி. பி. 956 முதல் கி. பி. 1013 வரை ஆகும்.

சேக்கிழார்

தொண்டை காட்டில் உள்ள குன்றத்துரளில் வேளா ளர் குலத்தில் சேக்கிழார் என்னும் பெயரையுடைய குடியில் இற்றைக்குச் சற்றேறக்குறைய எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் உதித்தவர் சேக்கிழார். அவருக்குத் தாய் தந்தையர் அருண்மொழித் தேவர் என்று பெயர் வைத்தனர். அவருக்குப் பாலரு வாயர் என்ற தம்பி ஒருவரும் பிறந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/95&oldid=585835" இலிருந்து மீள்விக்கப்பட்டது