பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாயன்மார் கதை

வைத்த மூவரும் வங்தால் அந்த அறையைத் திறந்து பார்க்கலாம்' என்ருர்கள். அரசன் நடராசப் பெருமானுக் குத் திருவிழாச் செய்து மூவர்களேயும் திருவீதியில் உலாவாக எழுந்தருளுவித்துக் கோயிலே வலமாக வரச் செய்து, குறிப்பிட்ட இடத்துக்கு எடுத்து வரச் செய்தான். அவ்விடத்தே பார்க்கும்போது கை இலச்சினே இருந்தது. அதைக் கண்டு யாவரும் வியப்படைந்தார்கள். அங்குள்ள மூடியை அகற்றி உள்ளே இருந்த அறையைப் பார்த்த போது புற்று மண்டிக்கிடந்ததைக் கண்டார்கள். - அது கண்டு சிங்தைசொந்த அரசன் மேலே மூடியிருக்த மண்மலையைத் தள்ளிக் குடம் குடமாக எண்ணெயைச் கொண்டு வந்து ஊற்றச் செய்தான். கீழே இருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்தபோது பல ஏடுகள் பழுதாகி விட்டதை அறிந்து, மிகவும் வருந்திக் கண்ணிர் சோர கின்ருன். அப்போது இறைவன் அசரீரிவாக்காக, 'மூவர் பாடலில் வேண்டுவனவற்றை வைத்து, மற்றவற்றை மண் மூடச் செய்தோம்" என்று அருளினுன்.

இறைவன் திருவுள்ளக் குறிப்பை அறிந்த மன்னன் ஆறுதல் பெற்று ஆடினன், பாடினன்; நம்பியாண்டார். கம்பியின் திருவடியில் விழுந்து பணிந்தான்; அடியவர் களுக் கெல்லாம் பொன்னே வீசினன். பிறகு அந்தத் தேவாரங்களே ஒழுங்குபடுத்தத் தொடங்கினன். கம்பி யாண்டார் கம்பியின் உதவி கொண்டு சம்பந்தர் அருளிய திருப்பதிகங்களே முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடல்களே அப்பால் மூன்று திருமுறை களாகவும், சுந்தரர் திருவாக்கை ஏழாந்திருமுறையாகவும் வகுத்தார்கள். அப்பால் மணிவாசகர் வாக்கை எட்டாக் திருமுறையாகவும், திருவிசைப் பாவை ஒன்பதாந்திருமுறை யாகவும், திருமந்திரமாலையைப் பத்தாந்திருமுறையாகவும் அமைத்தார்கள். பிறகு சிவபெருமான் அருளிய திருமுகப் பாசுரத்தையும் காரைக்கால் அம்மையார் முதலியவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/94&oldid=585834" இலிருந்து மீள்விக்கப்பட்டது