பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்ட வரலாறு 87

நெடுங்காலமாக ஒரு குறை உண்டு. அதனைத் தேவரீரிடம் விண்ணப்பம் செய்கிறேன்; கேட்டருள வேண்டும். மூவர் அருளிச் செய்த தேவாரங்களும் நாயன்மார்கள் வரலாறும் இப்போது தெளிவாகக் கிடைக்கவில்லை. அவை யாரும் அறிய விளக்கம் பெறவேண்டும். இதுவே அடியேனது நெடு நாளைய ஆசை” என்ருன்.

கம்பியாண்டார் கம்பி, "விநாயகப் பெருமானிடம் கேட்டுத்தான் இதைத் தெளிய வேண்டும்' என்று சொல்லி, அப்பெருமானுடைய சங்கிதியை அடைந்து வணங்கினர். பிறகு எழுந்து கண்ணில் நீர் வழிய நெஞ் சுருகி, "எப்பெருமானே, மூவர் தமிழ் இருக்கும் இடம் இன்னது என்பதையும், திருத்தொண்டர்களின் இயல்பு களையும் அருளிச் செய்ய வேண்டும்' என்று பிரார்த்தித் தார். அப்போது விநாயகர், 'மூவர் தமிழும் திருச்சிற்றம் பலத்தில் நடராசர் சங்கிதிக்குப் புறத்தே உள்ள வாயிலுக்கு அருகில் மூவர் கைகளின் அடையாளம் உள்ள இடத்தில் உள்ளன' என்று அருளி, தொண்டர்களைப் பற்றிய விவரங்களையும் அருளினர். அவற்றை அறிந்த நம்பிகள் அரசனிடம் வந்து யாவற்றையும் உரைத்தார். "திருஞான சம்பந்தப் பெருமான் தோடுடைய செவியன்’ என்று தொடங்கியது முதல் கல்லூர்ப் பெருமணம்' என்பது வரையில் பதிருையிரம் பதிகங்கள்,பாடியுள்ளார். திருநாவுக்கரசர் காற்பத்தொன்பதியிைரம் பதிகம் பாடி ஞர். திருவாரூர் கம்பியாகிய சுந்தரர் பதினெண்ணுயிரம் பதிகம் பாடினர். அவற்றைத் தம் கை இலச்சினைகளுடன் தில்லையில் வைத்திருக்கிருர்கள்' என்று விரிவாகச் சொன்னர்.

உடனே மன்னன் கம்பியாண்டார் கம்பியை அழைத் துக்கொண்டு தில்லை சென்று, அங்குள்ள தில்லைவாழங் தனர், காவலாளர் முதலியவர்களிடம் விநாயகப்பெருமான் அருளியது இது என்று சொன்னன். அவர்கள். "தமிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/93&oldid=585833" இலிருந்து மீள்விக்கப்பட்டது