பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாயன்மார் கதை

கண்ட அவன், காம் ஏதோ தவறு செய்திருக்கிருேம். அதனால்தான் இப்பெருமான் கிவேதனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை'என்று எண்ணி வருந்தின்ை. அந்தவருத்தம் தாங்காமல் தன் தலையைக் கல்லில் மோதிக் கொள்ளச் சென்ருன். அப்போது விநாயகர், "கம்பி, பொறு' என்று சொல்வி அங்கே வைத்திருந்த நிவேதனம் முழுவதையும் உண்டருளினர். உடனே கம்பி, "எம்பெருமானே, கான் பள்ளிக்கூடம் செல்ல கேரம் தாழ்த்துவிட்டது. பள்ளிக்குச் சென்ருல் எங்கள் வாத்தியார் அடிப்பார். ஆகையால் ேேய் எனக்குப் பாடம் சொல்விக் கொடுக்கவேண்டும்' என்ருன். அப்படியே விநாயகர் அப்பிள்ளைக்குக் கல்வி கற்பிக்க லானர். 安 -

மறு நாளும் இப்படியே நடைபெற்றது. தொடர்ந்து அந்த கம்பியாண்டார் கம்பியே விநாயகரைப் பூசித்து வந்தார். ஒவ்வொரு நாளும் பொல்லாப் பிள்ளேயார் நம்பி அளிக்கும் திருவமுதை உண்டு அவருக்குக் கல்வி கற்பித்து வந்தார். இந்த அதிசயச் செய்தி நாடு முழுவதும் பரந்தது. இராசராச சோழன் இந்தச் செய்தியைக் கேட்டான். உடனே பல வகைப் பழங்களேயும் அவல், அப்பம், எள்ளுருண்டை முதலியவற்றையும் வண்டி வண்டியாக காரையூருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்து அங்கே சென்ருன். பழங்களும் பிற பண்டங்களும் காரையூரில் சிரம்பின. அங்கே, இடம் போதாமல் ஊரின் எல்லே கடந்தும் அவற்றைக் குவித்தார்கள்:

சோழ மன்னன் கம்பியாண்டார் நம்பியை அடி பணிந்து, "இவற்றைப் பிள்ளையாருக்கு விவேதனம் செய்ய வேண்டும்” என்ருன். கம்பியும் விநாயகர் அடி பணிந்து வேண்டிக் கொள்ள, அவர் அங்கிருந்த எல்லாவற்றையும் அமுது செய்தருளினர். அது கண்டு விம்மிதமுற்ற அரசன் மெய் புளகம் போர்ப்பக் கண்ணிர் வார கம்பியாண்டார் நம்பி திருவடியில் வீழ்ந்து பணிந்து, "அடியேனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/92&oldid=585832" இலிருந்து மீள்விக்கப்பட்டது