பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்ட வரலாறு 85

திருமுறை கண்ட வரலாறு

சிவபெருமா னுடைய பெருமையைச் சொல்வன

சைவத் திருமுறைகள். அவற்றைத் தொகுத்தவர் நம்பி

யாண்டார் கம்பிகள், தொகுப்பதற்கு வேண்டியவற்றைச்

செய்தவன் இராசராச சோழன். அந்த வரலாறு வருமாறு. ★

தஞ்சாவூரில் இருந்து செங்கோலோச்சி வந்தான் இராசராச சோழன். அவன் சிவபக்திச் செல்வம் மிக்கவன்; சிவபாதசேகரன் என்ற சிறப்புப் பெயர் உள்ளவன். அக் காலத்தில் மூவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்கள் தொகுக்கப் பெறவில்லை. யாராவது அன்பர் தமக்குத் தெரிந்த பதிகம் ஒன்றைச் சொல்வார். தம் தம் ஊரைப் பற்றிய பதிகத்தை இப்படிப் பல அன்பர்கள் பாடுவதைக் கேட்டு அரசன் உருகினன். இந்தத் திருப்பதிகங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றுக் கேட்பது எப்போது? என்ற ஏக்கம் அவனுக்கு உண்டாயிற்று.

அக்காலத்தில் சிதம்பரத்தை அடுத்த திருகாரையூர் என்னும் திருத்தலத்தில் கோயில் பூசை புரிந்து வந்த ஆதிசைவருக்கு இறைவன் திருவருளால் மணியைப்போல் ஒர் ஆண் குழந்தை பிறந்து வளர்ந்து வந்தான். அச்சிறுவ னுக்குத் தந்தை உபநயனம் செய்து வைத்தார். ஒரு நாள் தங்தை வெளியூருக்குப் போளுர், அவர் சொல்லிச் சென்ற படி அங்குள்ள பொல்லாப் பிள்ளையாருக்கு அந்த இளைஞனே பூசை செய்யச் சென்ருன். திருமஞ்சனம் செய்து அர்ச்சனேயும் புரிந்து பிறகு விவேதனத்தை முன்னலே வைத்தான். 'எம்பெருமானே, அமுது செய்தருள வேண்டும்" என்று வேண்டினன். பிள்ளையார் அதை உண்ணுவார் என்று அந்த இளம்பிள்ளை எண்ணியிருக் தான் போலும்! விநாயகர் அதை உண்ணவில்லை. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/91&oldid=585831" இலிருந்து மீள்விக்கப்பட்டது