பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாயன்மார் கதை

ஒன்றையே குறிக்கொண்டு தன் மைந்தன் மார்பில் சக்கரம் பதியும்படி மனுவேந்தன் தன் தேரைச் செலுத்தின்ை. இவ்வாறு அறத்தைப் பாதுகாக்கும் செங்கோன்மையை வேறு யாரிடம் காணமுடியும் ?

" ஒருமைந்தன் தன் குலத்துக்கு

உள்ளான்என் பதும்உணரான் ; தருமம்தன் வழிச்செல்கை

கடன் என்று தன்மைந்தன் மருமம்தன் தேர்ஆழி

உறஊர்ந்தான் ; மனுவேந்தன் அருமந்த அரசாட்சி

அரிதோ,மற் றெளிதோதான் !' என்று சேக்கிழார் பாடுகிருர்,

அரசன் செய்கையைக் கண்டு மண்ணுலகத்தவர் கண் மாரி பொழிந்தனர். வானவர் பூமாரி பொழிந்தனர். அப் போது அங்கே திருவீதியில் சிவபெருமான் மழவிடைமேல் விதிவிடங்கப் பெருமானக எழுந்தருளிக் காட்சி கொடுத் தான். அரசன் இறைவனைத் தரிசித்துப் போற்றினன்.

எம்பெருமானுடைய திருவருளால், உயிர் பிரிந்த ஆன் கன்று உயிர் பெற்றுத் துள்ளி எழுந்தது; அரசகுமாரளுகிய கன்றும் எழுந்து அரசனை அடிபணிந்தான்; உயிர் நீத்த மந்திரியும் உயிர் பெற்று எழுந்தான். அடி பணிந்த மகனே மன்னன் தழுவிக் கொண்டான். தாய்ப் பசுவின் மடியிலே சுரந்த இனிய பாலே உண்டு மகிழ்ந்தது இளங்கன்று. யாவரும் அதிசயித்து இறைவனேப் போற்றினர். இறைவன் மன்னனுக்கு அருள் சுரந்து மறைந்தருளினன்.

இவ்வாறு மனு திேயின்படி மனுச் சோழன் அரசாண்டது திருவாரூர். எம்பெருமான் பல அடியார் களுக்கு அருள் வழங்கிப் பூங்கோயிலில் எழுந்தருளி விளங்குவது அந்தத் தெய்வத் திருககரம். -

-*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/90&oldid=585830" இலிருந்து மீள்விக்கப்பட்டது