பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனு நீதிச் சோழன் 83

அமைச்சரோ பின்னும், "இது போல் முன்பும் விகழ்ந் தது உண்டு. இதற்காக மைந்தனைக் கொல்லுதல் முறை யன்று. வேதம் சொன்னபடி பரிகாரம் செய்தல், பழங் கால முதல் வந்துகொண்டிருக்கும் நெறியல்லவா?" என்று எடுத்துக் கூறினர். மனு வேந்தன் கோபம் கொண்டு, 'நீங்கள் முறையற்றதைச் சொல்கிறீர்கள். இதுபோல் பழங்காலத்தில் நிகழ்ந்ததுண்டு என்கிறீர்களே. அப்படி யால்ை, எந்த உலகத்தில் எந்தப் பசு இத்தகைய துன்பத்தை அடைந்து ஆராய்ச்சி மணியை அடித்து விழுக் தது? சொல்லுங்கள், பார்க்கலாம்' என்ருன். மீண்டும், கசிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவாரூரில் பிறந்த உயிர்கள் யாவும் புனிதமானவை. அத்தகைய உயிரை அவன் கொன்று விட்டான். ஆதலின் கொலே செய்த வனேக் கொல்வதே தக்கது. இதுதான் இதற்குரிய தீர்ப்பு. இந்தப் பசு தன் கன்றை இழந்து வருத்துவது போல நானும் என் மகனே இழந்து வருந்துவதுதான் எனக்கு ஏற்றது' என்று உறுதியாகக் கூறினன். அதற்குமேல் பேச அஞ்சினர்கள் அமைச்சர்கள்.

உடனே மன்னவன் தன் மகனே வருவித்து, ஒரு மந்திரியிடம் அவனே ஒப்பித்து, "அவ்வீதியில் இவனே த் தேர்க்காவில் இட்டு ஊர்ந்து வருவாயாக' என்று பணித் தான். அமைச்சன் அது செய்ய விரும்பாமல் தன் உயிரைப் போக்கிக் கொண்டான். அது கண்ட அரசன் தானே தன் மைக்தனே அழைத்துக்கொண்டு வீதிக்கு வந்தான்.

வழி வழியே நாட்டை ஆளும் உரிமையும் கடமையும் படைத்த சோழ குலம் தொடர்ந்து ஆளும் வகையில் மனு வேந்தனுக்கு அம் மைந்தன் ஒருவனே இருந்தான். தன் குலத்துக்கு ஒரு மைந்தனே இருக்கின்ருன் என்ற உண்மையை வேந்தன் கினைத்துப் பார்க்கவில்லை. அறம் தன் வழியில் இடர்ப்படாமல் செல்ல வேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/89&oldid=585829" இலிருந்து மீள்விக்கப்பட்டது