பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாயன்மார் கதை

தேரும் படைகளும் அத்தேரைச் சூழ்ந்து சென்றன. அப்போது ஓர் இளம் பசுங்கன்று அந்தத் தேர்க்காவில் புகுந்து இறந்துவிட்டது. அதல்ை தளர்வுற்ற தாய்ப்பசு இவ்வாறு செய்தது" என்ருன்.

அதுகேட்ட மன்னன் அந்தப் பசுமாட்டுக்கு உண் டானது போன்ற துயரத்தை அடைந்து, "இந்தப் பாவம் சம்பவித்துவிட்டதே' என்று வருக்தின்ை; 'என் செங் கோல் முறை அழகிது!’ என்று பொருமினன்; 'என்ன செய்தால் இது தீரும்?' என்று யோசித்தான். அவ் னுடைய கிலேயைக் கண்ட மந்திரிமார் அவனே அடி வணங்கி, 'இதற்காகச் சிங்தை தளரவேண்டாம். முன்பு இவ்வாறு பசுஹத்தி செய்தவர்களுக்குப் பிராயச்சித்தம் விதித்திருக்கிருர்கள். அதன்படி மைந்தனேக் கொண்டு செய்விப்பதே அறம்' என்ருர்கள்.

அது கேட்டு மன்னன், முன்னே வழக்கின்படி பரி காரம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவ் வாறு செய்தால் தன் கன்றை இழந்து அலறும் பசுவுக்கு அது மாற்ருக உதவுமா? என் மைக்தனே இழக்கக்கூடாது என்ற எண்ணத்தால் நீங்கள் பரிகாரம் சொன்னல், தருமம் பிறழ்ந்து விடாதோ? உலகத்தைக் காக்கும் மன்ன வன் உயிர்க் கூட்டங்களே ஐந்து விதமான அச்சத்தினின் றும் பாதுகாக்கவேண்டும். தன்னலும் தன் சுற்றத்தாரா லும் பகைவராலும் கள்வராலும் பிற உயிர்களாலும் உண்டாகும் இங்குகளைப் போக்குவது அவன் கடன். என் மகன் செய்த கொலைக்குப் பரிகாரம் செய்துவிட்டு, வேறு ஒருவன் உயிர்க் கொலே செய்யும்போது அவனைக் கொல்வேனனல், பழைய மனு ரீதியானது இந்தப் புதிய மனுவினல் அழிந்துவிட்டது என்னும் பழியல்லவா என்னே வந்து சாரும் இத்தகைய யோசனையைச் சொன்னிர்களே!" என்று இகழ்ந்துரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/88&oldid=585828" இலிருந்து மீள்விக்கப்பட்டது