பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனு நீதிச் சோழன் 8I

இளங்கன்று ஒன்று அவன் சென்ற தேர்க்காலில் அகப் பட்டு இறந்துவிட்டது. அதைக் கண்ட தாய்ப் பசு உருகி அலறி அலமந்து சோர்ந்து வீழ்ந்தது.

அதைக் கண்ட அரசிளங்குமரன், "ஐயோ! இத் தகைய அபாயம் வந்துவிட்டதே' என்று அஞ்சித் தேரினின்று இறங்கி விழுந்தான். அலறுகின்ற பசுவைப் பார்த்து உயிர் பதைத் தான். இறந்து கிடந்த கன்றைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். "இவ்வுலகத்தைக் காக்கும் என் தந்தைக்கு இப் பழியை உண்டாக்கும் மைந்தனுக நான் பிறந்தேனே!” என்று புலம்பினன். 'இங் தப் பழியைப் போக்கிக்கொள்வதற்கு வேத சாஸ்திரங் களில் ஏதேனும் பரிகாரம் உண்டானல் அதை எங்தையார் அறிவதற்கு முன்பே நான் செய்வேன்' என்று கூறி அந்தணர்களே நோக்கிச் சென்ருன்.

கன்றை இழந்த பசுவோ பெருமூச்சு விட்டுக்கொண்டு முகத்தில் கண்ணிர் வார அரண்மனை வாயிலுக்குச் சென்று, அங்கே தொங்கிக்கொண் டிருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் அடித்தது. பலகாலமாக அந்த மணியின் ஓசையைக் கேட்டறியாத மன்னன், அதைக் கேட்டுத் திடுக்கிட்டான். அவன் சிங்காதனத்திலிருந்து இறங்கி வந்து விசாரித்தபோது, வாயில் காவலர், 'ஒரு பசு இங்கே வந்து வாயில்மணியைக் கொம்பால் அடித்தது' என்று சொன்னர்கள்.

பசுவைக் கண்டு வருந்திய மன்னன் அருகிலிருந்த அமைச்சர்களே நோக்கி, 'இதற்கு என்ன துன்பம் வந்தது?’ என்று கேட்க, முதிய அமைச்சன் ஒருவன் சொல்லலான்ை; 'சோழ மன்னனே, உன்னுடைய மகன் மணிகள் கட்டியதும் நெடுந்து ரத்தில் வரும்போதே தெரி யும் உயரம் உடையதுமாகிய ஒரு தேரின்மேல் ஏறி, அரசர்கள் உலாவரும் வீதியில் போனன். அளவில்லாத

நா. க-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/87&oldid=585827" இலிருந்து மீள்விக்கப்பட்டது