பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாயன்மார் கதை

கேட்கும். அப்படி உள்ள மாளிகைகளில் ஒன்றில்தான் பரவையார் அவதாரம் செய்தார்.

சிவபெருமான் சுந்தரருக்காகப் பரவைகாச்சியாரிடம் தாது சென்றமையின் அவ்வூர்த் திருவீதி அப்பெருமா னுடைய செந்தாமரைத் திருவடியின் மணம் வீசும். அங்குள்ள மக்கள் தேவாரப் பதிகங்களைப் பக்தியுடன் ஒதுவார்கள். அவற்றைக் கிளிகள் கேட்டுத் தாமும் கற்றுக்கொண்டு சொல்ல, பூவைகள் அவற்றைக் கேட்கும். ஆவண வீதிகளும் அந்தணர், அரசர், வணிகர், வேளாள்ர் . வாழும் வீதிகளும் அணியணியாக விளங்கும்.

சோழ மன்னர்கள் திருமுடி குட்டிக்கொள்ளும் நகரங் களில் ஒன்று அது. அங்கே சோழ அரசர்கள் இருந்து அரசாட்சி புரிந்ததும் உண்டு.

பழங்காலத்தில் மனுச் சோழன் என்னும் வேந்தன் அந்த நகரத்தில் இருந்து அரசாண்டு வந்தான். உயிர் களுக்குக் கண்ணேப் போலவும் ஆவியைப் போலவும் விளங்கிய அம் மன்னன் பல வேள்விகளைச் செய்தான். மனுநீதியின் வழியே செங்கோல் ஒச்சி வந்தான். திருவாரூ ரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாயகருக்குப் பலவகை கிவந்தங்களே வழங்கி, ஆகம முறைப்படியே பூசையும் விழாக்களும் கன்கு கடந்து வரும்படி செய்தான். அவ்வரசனுக்குச் சிங்கக் குட்டி போல ஒரு மைந்தன் பிறந்தான். அவன் கலைகள் பல ஒதி, யானையேற்றம் குதிரையேற்றம் முதலியவற்றையும் கற்றுக்கொண்டு, இளவரசுப் பட்டம் பெறுவதற்கு ஏற்ற பருவத்தை அடைந்தான். *

ஒரு நாள் அவ்வரச குமாான் பிற இளங்குமரர்கள் குழவும் சேனேகள் சூழவும் அரச வீதியில் தேரில் எறிச் சென்ருன். அப்போது அங்கே வந்த பசுவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/86&oldid=585826" இலிருந்து மீள்விக்கப்பட்டது