பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனு நீதிச் சோழன் 79 மனு நீதிச் சோழன்

திருவாரூரின் சிறப்பைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்கிருர். பெரிய புராணத்தில் பல நாயன் மார்களுடைய கதைகள் வருகின்ற்ன. அதனேக் காப்பிய வடிவத்தில் அமைக்கப் புகுந்த சேக்கிழார், அதற்குக் கதா நாயகராகச் சுந்தரமூர்த்தி நாயனரை அமைத்துக் கொண் டார். அவர் திருத்தொண்டத்தொகை அருளினர் என்று கூறி, அந்தத் திருப்பதிகத்திற் கண்ட நாயன்மார்களின் வரலாறுகளைச் சொல்லுகிறேன் என்று தொடங்கி அவற் றைப் பாடுகிருர், சுந்தரர் திருவாரூரில் தங்கிப் பரவை யாரை மணம் செய்துகொண்டு வாழ்ந்தார். ஆதலின் இந்தக் காப்பியத்துக்குரிய நாட்டுச் சிறப்பை அமைக்க எண்ணிய சேக்கிழார், சுந்தரர் வாழ்ந்த திருவாரூர் எந்த காட்டில் உள்ளதோ அந்த நாடாகிய சோழநாட்டையே காட்டுச் சிறப்பில் வருணித்தார். அப்படியே காப்பியத்துக்குரிய ககரச்சிறப்பை அமைக்கும்போது திருவாரூர்ச் சிறப்பையே எடுத்துச் சொன்னர். அதன் சிறப்பைச் சொல்லும்போது அங்கே அரசாண்ட மனு நீதிச் சோழனுடைய வரலாற்றை விரிவாகப் பாடினர்.

சோழ நாட்டில் தொன்மையில் மிக்கதும், திருமகள் வழிபட்டுப் பேறு பெற்றதுமான திருப்பதி திருவாரூர். அங்கே வேத ஓசையும் வீணையின் ஓசையும் தெய்வங்களைத் துதிசெய்வோர் புரியும் தோத்திர ஓசையும் மாதர்களின் நடனத்தில் முழங்கும் முழவின் ஓசையும் வேறு வகையான கீத ஓசைகளும் மலிந்திருக்கும். ஒருபால் தேரோடும் ஒலியும், ஒருபால் யானையின் முழக்கமும், ஒருபால் குதிரை யின் ஒலியும் எழும். மாட மாளிகைகளும் மண்டபங்களும் கிரம்பிய அந்நகரில் ஆடல் மகளிர் சிலம்பொலி எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/85&oldid=585825" இலிருந்து மீள்விக்கப்பட்டது