பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8. நாயன்மார் கதை

என்ருர். இறைவன், ‘என்ன ?” என்று கேட்க, "எம் பெருமானே, அடியேன் திருக்கயிலையைப் பற்றி ஒர் உலா வைப் பாடியுள்ளேன்; அதைத் திருச்செவியில் சாத்தியருள வேண்டும். என்னுடைய பாசம் நீங்க இந்த வன்ருெண்ட ருடைய கட்டை எனக்கு அருளிய பெருமான் அல்லவா ?” என்ருர்.

சிவபெருமான், அதனைச் சொல்லுக என்று பணிக்கவே, அங்கே சேரர் ஆதியுலாவை விண்ணப்பித்துக் கொண்டார். கேட்டு மகிழ்ந்த எம்பெருமான், "நீங்கள் இருவரும் நம்முடைய கணகாதராக இருங்கள்' என்று அருள் செய்தான். -

அது முதல் வன்ருெண்டர் பழையபடியே ஆலால சுந்தரராகித் தொண்டு செய்து வரலாஞர். சேரமான் பெருமாள் ஒரு கனகாதராக அங்கே இருந்து இறைவனுக் குரிய பணிகளே ஆற்றிவரத் தொடங்கினர். s -

பரவையார் சங்கிலியார் என்னும் இருவரும் பாசத் தொடக்கறுத்து, இறைவியின் திருவருளால் மீண்டும் கமலினியாராகவும் அரிக்திதையாராகவும் வந்து சேர்க் தனர்.

சுந்தரர் பாடிய, "தானெனே முன் படைத்தான் ” என்ற பதிகத்தை அவர் வருணகிைய ஆழிவேந்தனிடம் அளிக்க, அவன் அதைத் திருவஞ்சைக் களத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பித்தான். ஆதியுலாவைக் கைலேயில் கேட்ட சாத்தனர் திருப்பிடவூர் என்னும் ஊரில் வந்து

வெளிப்படுத்தினர்.

இவ்வாறு உலகம் உய்யவும் திருத்தொண்டத் தொகையில்ை காயன்மார்கள் புகழ் பரவவும் திருவவதாரம் செய்த சுந்தரமூர்த்தி காயனர் சைவசமயாசாரியரில் ஒருவ ராக கின்று யாவரும் புகழ்ந்து போற்றும் சிறப்போடு .கிலவுகிருர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/84&oldid=585824" இலிருந்து மீள்விக்கப்பட்டது