பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 77

தான் என முன் படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நான் எனப் பாடல் அந்தோ நாயினேனேப் பொருட்படுத்து வான்னனே வந்தெதிர் கொள்ள மத்தயானே அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே என்பது அப்பதிகத்தின் முதற் பாடல்.

திருக்கயிலையில் தென்திசைத் திருவாயிலை அடைந்தார் சுந்தரர். அங்கே சுந்தரரும் சேரமானும் முறையே யானே யினின்றும் குதிரையின்றும் இறங்கிப் பல வாயில்களைக் கடந்து திரு அணுக்கன் திருவாயிலே அடைந்தார்கள். சுந்தரர் உள்ளே புகுந்தார். ஆனல் சேரமான் உள்ளே புகமுடியாமல் தடையுண்டு கின்ருர்.

உள்ளே சென்ற சுந்தரர் சிவபெருமான ஆராத காதலுடன் தரிசித்துக் கீழே விழுந்து புளகம் போர்ப்ப கின்ருர். இறைவன் அவரைப் பார்த்து, 'ஊரனே, வந்தாயா?” என்று அன்புடன் வினவினன். ‘அடியேன ஆட்கொண்டு அடியேன் பிழையைப் பொறுத்து முடி விலாத நெறியிலே ஈடுபடுத்திய தேவரீர் பெருங்கருனே எளியேல்ை சொல்லும் தரத்ததோ!" என்று சொல்வி உருகி வின்ருர் சுந்தரர். பிறகு, "வாயிற் புறத்தில் சேரமான் பெருமாள் கிற்கின்ருர்' என்று சொல்ல, எம் பெருமான் திருகக்திதேவரைக் கொண்டு அவரை அழைத்து. வரச் செய்தான். r

சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு வந்து: வணங்கி விற்க இறைவன் புன்முறுவல் பூத்தவய்ை, காம் அழையாமலே நீ ஏன் வந்தாய்' எனக் கேட்டான். சேர மன்னர் அஞ்சலி செய்து, ‘எம்பெருமானே, அடியேன் ஆரூரர் கழலேப் போற்றி அவருடைய யானைக்கு முன்னே சேவித்தபடி வந்தேன். தேவரீருடைய கருணை வெள்ளம் இங்கே அழைத்து வந்தது. அதனல் திருமுன் வந்தேன், அடியேன் செய்துகொள்ளும் விண்ணப்பம் ஒன்று உண்டு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/83&oldid=585823" இலிருந்து மீள்விக்கப்பட்டது