பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாயன்மார் கதை

நாயனார். அப்போது அவருக்கு இறைவனோடு ஒன்றவேண் டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இந்த வாழ்க்கையி னின்றும் நீங்கிச் செல்ல வேண்டும் எனக் கருதினர். "தலைக்குத் தலமாலே அணிந்த தென்னே" என்று தொடங் கும் திருப்பதிகத்தைப் பாடலானர். எட்டாவது திருப் பாட்டில், "வெறுத்தேன் மனவாழ்க்கையை விட்டொழித் தேன்; விளங்குங் குழைக் காதுடை வேதியனே' என்பதில் தம் கருத்தைக் குறிப்பித்தார்.

சுந்தரருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்த சிவ பெருமான் பழையபடியே அவரைத் தன்னுடைய அணுக்கத் தொண்டராக்கிக் கொள்ளத் திருவுள்ளம் பூண்டான். பிரமன் முதலிய தேவர்களே அழைத்து, 'நாவலாரூரனை வெள்ளே யானையின்மேல் ஏற்றிக்கொண்டு இங்கே அழைத்து வாருங்கள்” என்று ஏவினன். அவர் கள் அவ்வாறே திருவஞ்சைக்களம் சென்று கோயில் வாயிலில் காத்து கிற்கப் புறத்தே சுந்தரர் வந்த போது, "எம்பெருமான் அருளிப்பாடு இது" என்று தெரிவித்தார்கள், உடனே அந்த யானேயின்மேல் ஏறித் தேவர் புடைசூழச் சுந்தரர் கைலேயை கோக்கிப் புறப் பட்டார். -

அப்போது அவர் தம் தோழராகிய சேரமான் பெருமாளே சினத்துக்கொண்டு சென்ருர். அதனே உணர்ந்த சேரர் ஒரு குதிரையில் ஏறித் திருவஞ்சைக்கள ஆலயத்துக்கு வந்தார். வெள்ளே யானேயின்மேல் செல்லும் சுந்தரரைக் கண்டார். உடனே குதிரையின் காதில் பஞ்சாட்சரத்தை ஒதவே, அது வானின்மீது பாய்ந்து செல்லத் தொடங்கியது. சுந்தரர் ஊர்ந்து சென்ற யானையை வலங்கொண்டு அதற்கும் முன்கை அது வேகமாகச் சென்றது.

யானேயின்மேல் சென்ற சுந்தரர் இறைவன் திருவருளே எண்ணி வியந்து ஒரு திருப்பதிகத்தைப் பாடினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/82&oldid=585822" இலிருந்து மீள்விக்கப்பட்டது