பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 75

திருந்தால் எவ்வளவு வளர்ந்திருப்பானே அவ்வளவு வளர்ச்சியுடன் அவன் இருந்தான். பிள்ளையைக் கண்ட தாய் ஒடி எடுத்துவந்து சுந்தரர் காலில் கிடத்தித் தானும் விழுந்தாள்; அவளுடைய கணவரும் விழுந்தார். வானவர் பூமாரி பொழிந்தனர். மண்ணவர் அதிசயித்தார்கள். யாவரும் திருக்கோயில் சென்று இறைவனைப் பணிக் தார்கள். i

அப்பால் முதலே வாயினின்றும் மீண்ட பிள்ளைக்கு . அன்றே உபநயனம் செய்யச் செய்து உடனிருந்து ஆசி கூறிய சுந்தரர், யாவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சேரமான் பெருமாளே நோக்கிப் புறப்பட்டார்.

இடையில் உள்ள தலங்களைத் தரிசித்து மலைகளையும் ஆறுகளேயும் கடந்து மலைநாட்டை அடைந்தார். "முதலே வாயிற் புகுந்த பிள்ளையை மீண்டும் வருவித்து அளித்துச் சுந்தரர் வஞ்சிமா நகரத்தை நோக்கி வருகின் ருர்" என் பதை அடியவர்கள் ஓடிவந்து முன்னதாகவே சேரமான் பெருமாளிடம் தெரிவித்தார்கள். சேரமன்னர் களிக் கடலில் மூழ்கித் திணறினர். அவருடைய வரவை முர சறைந்து எங்கும் தெரிவிக்கச் செய்தார். நகரத்தை கன்ருக அலங்கரிக்கச் சொன்னர். யானையை அணிசெய்து எதிர்கொண்டு அழைத்துவரப் புறப்பட்டார். நகரில் புகுந்த சுந்தரரைச் சேரமான் வணங்க, மன்னரை காவல் ஆரூரரும் பணிந்து கலம் விசாரித்தனர். கட்பிலே சிறந்த அவ்விருவரும் அளவளாவினர். சேரமான் சுந்தரரை யானேயின்மேல் ஏற்றித் தாமும் பின் ஏறி அவருக்குக் குடை பிடித்தார். நகரை வலம்வரச் செய்து வஞ்சிமாநகர் அரண்மனைக்கு அழைத்துச் சென்ருர். சுந்தரர் சிலநாட்கள் அங்கே பலவகை உபசாரங்களையும் பெற்றுத் தங்கி யிருந்தார். -

ஒரு நாள் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்யத் தொடங்கினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/81&oldid=585821" இலிருந்து மீள்விக்கப்பட்டது