பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாயன்மார் கதை

வந்த பிள்ளைக்கு இன்று உபநயனம் நடக்கிறது. அந்த வீட்டு மேளவாத்தியம் அதைக் காட்டுகிறது. இந்த வீட்டில் உள்ளவர்கள், நம் பிள்ளே உயிரோடிருந்தால் அவனுக்கும் இப்படி உபநயனம் செய்து களிக்கலாமே, அது இல்லாமற் போயிற்றே! என்று வருந்தி அழுகிருர் கள் ' என்று அவர் காரணத்தை விளக்கினர்.

இதைக் கேட்ட சுந்தரர் மிக இரக்கம் கொண்டார். பிள்ளையை இழந்த வீட்டுக்காரர்கள் அவரைக் கண்டு தம் வருத்தத்தை மறைத்துக்கொண்டு வந்து அவருட்ைய திருத்தாளை இறைஞ்சினர்கள். அவர்களைக் கண்ட சுந்தார், "நீங்கள் உங்கள் மைக்தனே இழந்து விட்டீர் களோ?” என்று கேட்க, அது முன்னே சிகழ்ந்த செய்தி: இப்போது தேவரீர் இங்கே எழுந்தருளப்பெறும் பேறு எங்களுக்குக் கிடைத்தது" என்று கூறித் தொழுதார்கள். "நாம் வந்த இதற்கு மகிழ்ந்து, தம் துயரத்தையும் மறந்து கிற்கும் இவர்களுடைய மைந்தனே இறைவன் திருவருளால் மீண்டும் வருவித்துக் கொடுக்கவேண்டும்’ என்று ஆளுடை கம்பி திருவுள்ளம் கொண்டார். "முதலே பிள்ளையை விழுங்கிய மடு எங்கே ?” என்று கேட்க, அவர் கள் அங்கே அவரை அழைத்துச் சென்ருர்கள். அங்கே கின்று அவிநாசியப்பரை எண்ணி, "எற்ருன் மறக்கேன்" என்று ஒரு திருப்பதிகம் பாடத் தொடங்கினர். மூன்று பாடல்கள் பாடி கான்காவது பாட்டையும் பாடலானர்.

உரைப்பார் உரையுகத் துள்.கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அத்தமும் ஆயினுப் - புரைக்காடு சோலப் புக்கொளியூர்,அவி நாசியே கரைக்கால் முதலயைப் பிள்ளை தரச்சொல்லு காலனேயே என்ற பாட்டு வெளியாயிற்று. இந்தப் பாட்டு முடிவ. தற்குள் ஒரு முதலே கரையருகே வந்து பிள்ளையைக் கக்கியது. அதுவரையில் அந்தப் பிள்ளை உலகில் வாழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/80&oldid=585820" இலிருந்து மீள்விக்கப்பட்டது