பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 73

கோயில் முற்றத்தில் சுந்தரர் இழந்த பொருள்கள் யாவும் குவியலாக வந்து கிடந்தன. இறைவன் திருவருளால் நிகழ்ந்தது இது' என்பதை உணர்ந்த நம்பி ஆரூரர் மீட்டும் இறைவனை வணங்கி அப்பொருள்களே எடுத்துக்கொண் டார். உடன் வந்த ஏவலர்களிடம் அவற்றை அளித்து முன்னே போகச் செய்து, மிக்க காதலுடன் திருவாரூர் சென்று அடைந்தார். 's

நிறைவு

திருவாரூரில் சுந்தரமூர்த்தி நாயனர் இருந்தபோது மீட்டும் திருவஞ்சைக் களம் சென்று சேரமான் பெருமாளேப் பார்த்து வரவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அதல்ை திருவாரூரினின்றும் புறப்பட்டு, இடையில் உள்ள தலங்களேத் தரிசித்துக் கொண்டு கொங்கு நாட்டில் உள்ள திருப்புக்கொளியூர் அவிநாசி என்னும் திருப்பதியை அடைந்தார். இப்போது அவிநாசி என்றே அவ்வூர் வழங்குகிறது.

மறையோர் வாழும் வீதியின் மருங்கே அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கே ஒரு வீட்டில் மங்கல வாத்தி யங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன; அவ்வீட்டு வாயிலில் தோரணம், வாழை முதலியவற்றைக் கட்டியிருந்தார்கள். அதற்கு எதிர் வீட்டில் அழுகை யொலி கேட்டது. இவற் றைக் கவனித்த சுந்தரர் அருகிலுள்ளோரை, "ஏன் இப்படி இரு வேறு வீடுகளிலும் இரு வேறு ஒலிகள் கேட்கின்றன?" என்று வினவினர்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு வீடு களிலும் இருந்த இரண்டு பிள்ளைகள் இவ்வூர்ப் பொய்கைக்கு நீராடச் சென்ருர்கள். அப்போது அவர் களுக்கு ஐந்து பிராயம். நீராடியபோது ஒரு பிள்ளையை மடுவில் இருந்த முதலே விழுங்கிவிட்டது. பிழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/79&oldid=585819" இலிருந்து மீள்விக்கப்பட்டது