பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாயன்மார் கதை

யாயிற்று. ஆகவே, சேரமன்னரிடம் விடைபெற்ருர். சுந்தரருடைய பிரிவைப் பொருமல் சேரமான் பெருமாள் வருந்தினர். 'எம்பெருமான் திருவருள் கலத்தால் இங்கே இருந்து இனிதாக அரசாட்சி செய்து கொண்டிரும்" என்று சுந்தரர் ஆறுதல் கூறினர். அப்பெருமானுக்குத் திருவாரூருக்குப் போக வேண்டும் என்று இருக்கும் பேரார்வத்தை உணர்ந்த சேரர் அவரை வணங்கி வழியனுப்பலானர். பல வகையான பண்டங்களேயும் பொன்னேயும் அளித்து விடை கொடுத்தார். -

சேரமானிடம் பெற்ற பொருள்களுடன் சுந்தரர் திருவாரூரை நோக்கிப் புறப்பட்டவர் கொங்கு காட்டின் வழியே வந்தார். திருமுருகன் பூண்டிக்குஅருகில் அவர் வந்து கொண்டிருந்தார். சுந்தரர் இதுவரைக்கும் பெற்றவை எல்லாம் சிவபெருமான் அளித்தவை. அவர் வேறு யாரிடமிருந்தும் ஏதும் பெறவில்லை. இப்போது சேரமான் வழங்கிய பொருள்களோடு வந்தார்."இந்தப் பொருள்களைப் பறித்து நம் கையாலே தருவோம்' என்று இறைவன் எண்ணினன் போலும் சிவகணங்களே அழைத்து, "நீங்கள் வேடுவர்களாகச் சென்று நம்பியாரூரன் கொண்டு செல்லும் பொருள்களைப் பறித்து வாருங்கள்” என்று ஏவினன்.

அப்படியே அவர்கள் வேடுவர்களைப்போல உரு வெடுத்துச் சுந்தரரை வழிமறித்து, 'எல்லாப் பொருள் களேயும் இப்படியே வையும்; இல்லையானுல் கொன்று விடுவோம்” என்று அச்சுறுத்தி, அவற்றைப் பறித்துக் கொண்டு ஓடினர். பொருளைப் பறிகொடுத்த சுந்தரர் அருகில் ஆலயம் தெரிவதைக் கண்டு அங்கே சென்ருர். "சுவாமி, வேடுவர்கள் கொள்ளேயிடும் இந்த இடத்தில் ஏன் இருந்தீர்?" என்று வருந்தி, 'கொடுகு வெஞ்சிலே' என்ற திருப்பதிகம் பாடினர். அப்போது இறைவன் அருளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/78&oldid=585818" இலிருந்து மீள்விக்கப்பட்டது