பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனும் 71

அது அட்ட வீரட்டங்களில் ஒன்று. அதற்கு எதிரே வடகரையில் திருவையாறு உள்ளது. திருக்கண்டியூரில் கின்று பார்த்தபோது திருவையாறு அக்கரையில் தோன்றியது. சேரமன்னர் அத்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அப்போது காவிரியில் பெருவெள்ளம் சென்று கொண் டிருந்தது. ஒடங்கூடச் செல்ல முடியாத வகையில் வேகமாகப் பெருக்கெடுத்தோடியது.

சுந்தரர் காவிரிக் கரையை அணுகி ஒரு திருப்பதி கத்தைப் பாடினர். உடனே மேற்கிருந்து வரும் நீர் பளிங்கினல் அணைபோட்டதுபோல கின்றுவிட, இடை யிலே மணல் தோன்றி ஒரு வழி உண்டாயிற்று. இறைவனைப் பணிந்தபடியே இரண்டு திருத்தொண்டரும் அதன் வழியே சென்று திருவையாறு புகுந்து இறைவனத் தரிசித்து வழிபட்டனர். பிறகு மீட்டும் பழையபடியே இடையில் விழிவிட்ட ஆற்றின் நடுவே நடந்து வந்து தென்கரையை அடைந்தார்கள். அடைந்தவுடன் பழைய படி காவிரிநீர் ஓடத் தொடங்கியது. இந்த அதிசயத்தைக் கண்டு சேரமானும் பிறரும் சுந்தரர் பெருமையை கினேந்து பாராட்டி வணங்கினர்கள்.

அப்பால் சேரமான் பெருமாள் சுந்தரரைச் சேர நாட்டுக்கு அழைத்துச் சென்ருர். திருவஞ்சைக் களத்தில் சுந்தரரை மிகச் சிறப்பாக வரவேற்று உபசரித்தார். தம்முடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவர் திருவடிக்குப் பூசை செய்து உபசரித்து விருந்து செய்தார். அங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானைத் தரிசித்துச் சுந்தரர் திருப்பதிகம் பாடினர். ,

சேரமன்னருடன் அளவளாவிச் சிலநாட்கள் சுந்தரர் திருவஞ்சைக் களத்தில் தங்கினர். அவருக்குத் திருவாரூர்ப் பெருமானப் பிரிந்திருக்கப் பொறுக்கவில்லை. அப்பெரு மானைத் தரிசிக்கவேண்டும் என்ற ஆராமை மிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/77&oldid=585817" இலிருந்து மீள்விக்கப்பட்டது