பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாயன்மார் கதை

வந்திருந்தான். ஆகவே முடிபுனே வேந்தர் மூவரும் ஒன்று கூடினர்; சுந்தரரை வணங்கினர். யாவரும் மதுரைத் திருக்கோயில் சென்று இறைவனே வணங்கினர். சுந்தர மூர்த்தியார் திருப்பதிகங்களைப் பாடியருளினர்.

பிறகு தோழர்கள் இருவரும் பர்ண்டிநாட்டுத் திருப் பதிகள் பலவற்றுக்கும் சென்று வழிபட்டுத் திருச்சுழியலே அடைந்தார்கள். அங்கே இறைவனேப் பணிந்து இரவு தங்கியபொழுது, சுந்தரமூர்த்தி நாயனர் கனவில் இறைவன் ஒரு புதிய திருக்கோலத்துடன் எழுந்தருளிக் காட்சி. அளித்தான். காளைப் பருவமுடைய திருமேனியுடன் தலையில் கொண்டையும் கையில் பொன்னலாகிய செண்டா யுதமும் உடைய கோலத்தைக் காட்டினன். "நாம் இருப்பது திருக்கானப்பேர்” என்று அருளிய உடனே மறைந்து விட்டான். அருகிலுள்ள கானப் பேரில் உள்ள பெருமானுக்குக் காளைப் பெருமான் என்பது திருகாமம். அதனால் அத்தலத்துக்குக் காளேயார் கோயில் என்ற பெயர் வழங்கும். அத்தலத்துக்குத் தம்மை இறைவன் அழைத்த குறிப்பு அக்கனவு என்பதை உணர்ந்த சுந்தரர், சோ மன்னருடன் அத்தலம் சென்று, இறைவனே வணங்கிப் பதிகம் பாடிச் சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார்.

பிறகு வேறு சில தலங்களைப் பணிந்து திருவாரூர் வந்தடைந்தனர் இருவரும். பரவையார் செய்த உபசாரத் தாலும் அளித்த விருந்திலுைம் மனம் மகிழ்ந்து இரண்டு நண்பர்களும் சில நாள் அங்கே தங்கி அளவளாவினர்கள். ஒருநாள் சேரமான் பெருமாள் நாயனர் சுந்தரமூர்த்தி யாரை வணங்கி, "தேவரீர் மலைநாட்டுக்கு அடியேடனுன் எழுந்தருள வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொண் டார். அவர் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்த சுந்தார் அவருடன் புறப்பட்டார்.

திருவாரூரினின்றும் புறப்பட்ட அவர்கள் திருக் கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து வழிபட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/76&oldid=585816" இலிருந்து மீள்விக்கப்பட்டது