பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 69

சேரநாட்டில் திருவஞ்சைக் களத்தில் இருந்து அரசாண்டு வந்தார் சேரமான் பெருமாள் காயர்ை. அவர் ஒவ்வொரு நாளும் சிவபெருமானப் பூசை செய்து முடித்த வுடன் இறைவனுடைய பாதச் சிலம்பொலி கேட்கும். அதல்ை மன நிறைவு பெறுவார். ஒரு நாள் பூசை முடிந்தும் சிலம்பொலி கேட்கவில்லே. அதனல் வருந்திய பொழுது சிறிது நேரம் கழித்து அவ்வொலி கேட்டது. அதோடு, "தில்லையில் வன்ருெண்டன் நம்மைத் தரிசிக்க வந்தான். அதனால் தாமதமாயிற்று' என்று இறைவன் அருளின்ை. அதுகேட்ட சேரமான், அத்தகைய அடியாரைத் தரிசித்து இன்புறவேண்டும்' என்ற ஆர்வம் உடையவரானர்.

தம் காட்டினின்றும் நீங்கித் திருத்தில்லை சென்று நடராசப் பெருமானைத் தரிசித்துக் கொண்டு, சுந்தரர் திருவாரூரில் எழுந்தருளி யிருப்பதை அறிந்து அங்கே சென்ருர். சுந்தரர் அவர் வரவை யறிந்து வரவேற்கச் சேரமானும் சுந்தரரும் கண்பர்களாயினர். தம்பிரான் தோழராகிய சுந்தரர் இப்போது சேரமான் தோழரும் ஆர்ை.

அப்பால் இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று இறைவனே வழிபட்டார்கள்.

பாண்டிநாடும் சேரநாடும் சென்று வருதல்

சேரமான் பெருமாள் காயனர் திருவாலவாயைத் தரிசிக்கவேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவிக்கச் சுந்தரர் அவருடன் புறப்பட்டார். சோழநாட்டுத் திருப்பதிகள் சிலவற்றைத் தரிசித்துக் கொண்டு அவ்விரு வரும் மதுரையை அடைந்தார்கள். அவர்கள் வரவை அறிந்த பாண்டிய மன்னன் தக்க வகையில் பெருஞ் சிறப்புடன் வரவேற்ருன், பாண்டியன் பெண்ணே மணந்துகொண்ட சோழ மன்னனும் அப்போது அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/75&oldid=585815" இலிருந்து மீள்விக்கப்பட்டது