பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நாயன்மார் கதை

ருைக்குச் சூலைநோயை உண்டாக்கினன். அதனுல் அவர் மிக வருந்தியபோது இறைவன் அவர்பால் சென்று, 'சுந்தரன் வந்து இதனைத் தீர்ப்பான்' என்று அருளின்ை. ‘எம்பெருமானே ஏவல் கொண்ட அவர் வந்து தீர்ப்பதை விட நான் இந்த நோயால் வருந்துவதே நன்று' என்று மறுத்தார் அவர். இறைவன் மறைந்தருளிச் சுந்தரரிடம் சென்று, "நீ போய்க் கலிக்காமனுடைய சூலை நோயைத் தீர்த்து வா' என்று பணித்தான்.

சுந்தரர் கலிக்காம நாயனரிடம் செல்லப் புறப்பட்டு, தாம் வருவதை முன் கூட்டியே சொல்லியனுப்பினர். அது கேட்ட ஏயர்கோன், இவர் கையால் நோய் தீர்வதைவிட கான் சாவதே கன்று’ என்று எண்ணித் தம் உடைவாளால் குத்திக்கொண்டு உயிர் நீத்தார். அவருடைய மனைவி சுந்தரர் வருவதை அறிந்து, ஏயர்கோன் உடம்பை அலங் கரித்துப் படுக்கையில் விடச்செய்து, "யாரும் அழாதீர்கள். நம்பியாரூரரை வேண்டிய உபசாரங்கள் செய்து எதிர் கொள்ளுங்கள்' என்ருள். அப்படியே அவர்கள் எதிர் கொள்ள, 'ஏயர்கோன் உடல் நலம் எப்படி இருக்கிறது?” என்று சுந்தரர் கேட்டார். "அவர் படுக்கையில் படுத் துள்ளார் ; நோய் இல்லே' என்ருர்கள். அது கேட்ட சுந்தரர், 'கான் அவரைப் பார்க்க வேண்டும்' என்று சொல்ல அவர்கள் அழைத்துச் சென்ருர்கள்.

சுந்தரர் அவர் சிலையைக் கண்டு, 'நானும் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று குற்றுடை வாளே எடுத்தார். இறைவன் திருவருளால், பிணமாகக் கிடந்த ஏயர்கோன் உயிர்பெற்று எழுந்து, சுந்தரர் செய்கையைத் தடுத்து, உடைவாளை வாங்கிக்கொண்டார். சுந்தரர் உடனே ஏயர் கோனேப் பணிய அவரும் சுந்தரரைப் பணிந்தார். இருவரும் எம்பெருமான் பெருங்கருணைச் சிறப்பை எண்ணிப் போற்றினர். அன்று முதல் இருவரும் நெருங்கிய கண்பர்களாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/74&oldid=585814" இலிருந்து மீள்விக்கப்பட்டது