பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனூர் 67

சுந்தரரை வரவேற்பதற்கு ஏற்ற வகையில் விளக்கு, அாபம், சிறைகுடம் முதலியன வைத்துக் காத்திருந்தார். தோழியர் சூழ மாமணி வாயிலில் கின்ற அவர், சுந்தரர் வந்தவுடன் காணமும் அச்சமும் மீதுரா, அவரை வணங்கி ஞர். காயனர் பரவையாருடைய தளிர்ச் செங்கையைப் பற்றிக் கொண்டு திருமாளிகையுள் புகுந்தார். r

அப்பால் இருவரும் இறைவன் செய்த திருவிகள யாடலையும், அவன் கருணேத் திறத்தையும் போற்றி மகிழ்ந்து, மனம் ஒன்றி இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து ஒன்று பட்டனர். . .

சேரமான் தோழமை காவிரியின் வடகரையில் பெருமங்கலம் என்ற ஊரில் சோழ மன்னர்களின் சேனைத் தலைவராவார் குடியாகிய எயர்குடியில் கலிக்காமர் என்னும் அன்டர் ஒருவர் பிறந் தார். அவர் சிவனடியார்பால் மிக்க அன்புடையவராகி வாழ்ந்தார். சுந்தார் இறைவனைப் பரவையார் பால் து.ாதுவிட்டார் என்ற செய்தி அவர் காதில் விழுந்தது. அது கேட்டு, ‘எம்பெருமானே இவர் ஏவியது கன்ருயிருக் கிறது" என்று கோபமும் அதிசயமும் கொண்டார். எம் பெருமான்தான் அடியவருக்கு எளியணுயினல் இந்த மனிதன் ஒரு பெண் பிள்ளையிடம் இரவில் தூதனுப்புவ தாவது! அந்த மனிதரைக் கண்டால் என்ன செய்வேனே?” என்று கோபம் மிக்க உள்ளத்தினராகி இருந்தார்.

இந்தச் செய்தியை அறிந்த சுந்தார் தாம் பிழை செய்ததை ஒப்புக்கொண்டு, 'இதற்குத் தேவசிரே எதே லும் பரிகாரம் செய்தருள வேண்டும்” என்று இறைவனே வேண்டினர். . . .

இறைவன் அவ்விருவரையும் கட்பாக்க வேண்டும் என்று திருவுள்ளங் கொண்டு எயர்கோன் கலிக்காம நாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/73&oldid=585813" இலிருந்து மீள்விக்கப்பட்டது