பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாயன்மார் கதை.

பரவையார் தம் சிரத்தின்மேல் கைகளைக் குவித்து உளம் கடுங்கி வருந்த, "எம்பெருமானே, முன்பு மறையவர் கோலத்தில் யான் செய்த தவப்பயணுக வந்தவர் தேவரீர் தாமா?’ என்று வியந்து, கண்ணிர் வார, தேவரீருடைய சேவடி வருந்த ஓர் இரவு முழுதும் இங்கும் அங்குமாக எழுந்தருளி எளிவந்து கருணை பாலிக்கும்போது அடியேன் இசையாமல் என்செய்வது?’ என்ருர்.

"வின் பண்புக்கு ஏற்றவாறே கல்லதே பேசிய்ை' என்று கூறி, இறைவன் அங்கிருந்தும் அகன்று சுந்தரரை அடைந்தான். சுந்தரர், "என் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுப் போன பெருமான் என்ன செய்து மீள் வாரோ?” என்று கவலையுடன் எங்கி வழிபார்த்து நின்ருர், இறைவன் வரவு கண்டு எதிர்சென்று வணங்க, எம்பெரு மானே, என் உயிரைக் காவாமல் துன்புறுத்தும் பெண் மணியினிடமிருந்து என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்க, 'அவளுடைய கோபத்தை ஆற்றி விட்டோம். இனி நீ அவள்பாற் போய்ச் சேர்” என்று அருளினன்.

சுந்தரர் மிக்க களிப்படைந்து, "எந்தாய், எம்பிரானே, பந்தமும் வீடும் தருபவர் தேவரீர். அதன்படியே இங்கே துன்பமும் பின்பு விடுதலையும் அருளினர்கள். இனி எனக்குத் துன்பம் ஏது' என்று கூறி அவனுடைய திருவடியில் வீழ்ந்தார். இறைவன், "கீ பரவையினிடம் சென்று இன்புற்று வாழ்வாயாக" என்று வாழ்த்தி மறைக் தருளினன்.

உடனே சுந்தரர் தம் பரிசனங்களுடன் பரவையார் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விடிந்து விட்டமை யின் தொண்டர்களும் எழுந்து சந்தனம், மலர்மாலை, கஸ் துரி, கர்ப்பூரம், குங்குமம் முதலிய மங்கலப் பொருள்களே எடுத்துக்கொண்டு உடன் சென்றனர். பரவையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/72&oldid=585812" இலிருந்து மீள்விக்கப்பட்டது