பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்ந்தி நாயனுர் 85

சுந்தரர் இதனேக் கேட்டுத் துணுக்குற்ருர், "எம்பெரு மானே, தேவரீர் அருளிச் செய்யப் பரவையோ மறுப் பவள்? நாங்கள் வேறு யாருடைய அடிமை என்று எண்ணி இதைச் சொன்னிர்கள்? இன்று என் திறத்தில் அன்பின்றி கலம் செய்யாவிட்டால் அன்று வலியவந்து தடுத்தாட் கொண்டது எதற்கு? நான் படுகின்ற வருத்தத்தை நீர் நன்கு அறிவீர். பரவையிடம் சென்று அவள் கோபத்தைத் தணித்து என்ன அவளுடன் சேர்க்காவிட்டால் என் உயிர் கில்லாது" என்று புலம்பி வீழ்ந்தார்.

அது கண்ட இறைவன் அருளுடன் பார்த்து,"இன்னும் ஒரு முறை அவளிடம் சென்று நீ அவளே அடையும் வழியைச் செய்கின்ருேம். உன்னுடைய துயரத்தை ஒழிக’ என்று கூறிப் புறப்பட்டான். சுந்தரர் உடன் சென்று வணங்கி வழியனுப்பி வந்தார்.

பரவையார் மறையவராகி வந்த இறைவன் மீண்ட பின்பு, சில குறிப்புகளால் இறைவனே மறையவர் கோலத் தில் எழுந்தருளினன் என்பதை உணர்ந்து கொண்டார். "அந்தோ, நான் என்ன காரியம் செய்தேன்; எம்பிரான் கூறியதை மறுத்தேனே!' என்று வருக்தினர். இரவு துயிலாமல் வாயிலைப் பார்த்தபடியே இருந்தார்.

இந்த முறை இறைவன் தன் இயல்பான திருவுருவத் தோடு சென்ருன். கணநாதர் சித்தர் இயக்கர் முதலியவர் களும் உடன் சென்ருர்கள். யாவரும் பரவையார் திரு மாளிகையுள் புகுந்தபோது, பரவையார் உடல் நடுக்கத் தோடும் மேலெழுந்து டொங்கும் மகிழ்ச்சியோடும், இறை வனே எதிர்கொண்டு சென்று பணிந்தார். அப்போது எம்பெருமான் அவரை கோக்கி, "என்பால் உள்ள உரிமை யால் நாவலாரூரன் எவ மீண்டும் உன்பால் வந்தோம்; இன்னும் முன்போல் நீ மறுக்காதே. சின் பிரிவால் அவன் மிக வருந்துகிருன். அவன் இங்கு வருவதானல் நீ அவனே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ருன், -

நா. க-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/71&oldid=585811" இலிருந்து மீள்விக்கப்பட்டது