பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நாயன்மார் கதை

ஆதலின் நீ மறுக்கக் கூடாது' என்று மீண்டும் மறையவர் வற்புறுத்தினர். - பரவையாருக்கு வெகுளி மூண்டது: "இதற்காக நீர் இந்த வீட்டுக்கு வருவது உம் பெருமைக்கு ஏற்றதன்று. திருவொற்றியூரில் பற்றுடையவர் இங்கே வருவதற்கு இசையமாட்டேன். உமக்கும் இங்கே இனி வேலை இல்லை; போம்' என்று மறுத்துச் சொன்னர்.

இறைவன் தனக்குட் சிரித்துக் கொண்டான். தன் னுடைய உண்மைக் கோலத்தை உணர்த்தவில்லை. சுந்தரரு டைய வேட்கையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் திருவிளையாடலே மேற்கொண்டு மீண்டான்.

இங்கே சுந்தரர், எம்பெருமானே அறிவில்லா காயேன் பரவையின் ஊடலே நீக்கும் பொருட்டு அனுப்பினேனே! என்ன பேதைமை" என்று வருக்தி, எப்படியும் எம்பெரு மான் அவள் புலவியைத் தீர்த்து வருவான் என்ற கம்பிக் கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக அவருடைய ஆவல் மீதார, பலவகை எண்ணங்கள் எழுந்தன. - - இறைவன் மீண்டும் வந்தது கண்டு, அனேகடந்த வெள்ளம் போல ஒடிச் சென்று அவனே வரவேற்ருர். எம்பெருமான் புன்முறுவல் பூண்ட முகத்தோடு வருவதைக் கண்டு, போன காரியம் வெற்றி என்று எண்ணிக் கொண்டு, "எம்பெருமானே, அன்று என்னே ஆண்டு கொண்ட உரிமையை மறவாமல், அதற்கு ஏற்ப இன்று எழுந்தருளி அவளுடைய வெகுளியைத் தீர்த்து நலஞ்செய் திரே!' என்று களிப்புடன் கூறினர். இறைவன், * உன் னுடைய விருப்பப்படியே பரவையின் இல்லம் கண்ணி, உன் செய்தி யெல்லாம் கூறினேன். அவள் ஏற்றுக் கொள்ளாமல் கொடுமை சொன்னள். நான் எத்தனை வேண்டிக் கொண்டாலும் மறுத்துவிட்டாள்" என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/70&oldid=585810" இலிருந்து மீள்விக்கப்பட்டது