பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 63

சுந்தரர் மீட்டும் இறைவனை வணங்கினர். உடனே, எம்பெருமான் பரவையார் திருமாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அப் பெருமானுடன் கண நாதரும் தேவர் களும் செல்லத் திருவாரூர்த் திருவீதி சிவலோகம் போல விளங்கியது.

பரவையார் திருமாளிகையை அடைந்தபோது உடன் வந்தவர்கள் புறம்பே கிற்க, எம்பெருமான் திருவாரூர்க் கோயில் அர்ச்சகரைப்போல உருக்கொண்டு தனியே உட் புகுந்தான். புகுந்து அடைத்திருந்த கதவைத் தட்டினன். உள்ளே துயிவின்றிக் கிடந்த பரவையார் குரலிலிருந்து, "கம்மை உடைய எம்பெருமானேப் பூசிக்கும் மறையவர் போலும்!” என்று எண்ணி, பாதி இரவில் இவர் இங்கே வருவதற்கு என்ன காரணம்?' என்று அஞ்சி எழுந்து வந்து கதவைத் திறந்தார். எதிரே கின்றவரைக் கண்டு, "பெரியீர், இப்போது இங்கே எழுந்தருளக் காரணம் யாது?' என்று கேட்டார்.

மறையவர், "நான் கேட்பதை மறுக்காமல் செய்வ தானுல் சொல்கிறேன்' என்ருர்.

பரவையார், "அதைச் சொல்லுங்கள்; என்னல் இயலுமானல் செய்கிறேன்' என்ருர்.

உடனே அவர், "காவலூர் கம்பி இங்கே வந்து முன் போல் வாழவேண்டும்' என்ருர். -

அதுகேட்ட பரவையார், "கன்ருக இருக்கிறது நீங்கள் சொல்வது! என்னேப் பிரிந்து சென்று திருவொற்றி யூரை அடைந்து சங்கிலியால் பிணிப்புண்டவருக்கு இங்கே ஒரு தொடர்பு உண்டாகுமோ? இரவில் வந்து நீங்கள் சொன்ன காரியம் அழகாயிருக்கிறது' என்ருர்,

'கங்காய், கம்பி செய்த குற்றங்களே யெல்லாம் மறந்து உன் கோட்ம் ஆறி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குத்தானே நான் உன்னே வேண்டிக் கொண்டேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/69&oldid=585809" இலிருந்து மீள்விக்கப்பட்டது