பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 நாயன்மார் கதை

யாவரும் துயிலில் ஆழ, அவர் மட்டும் தனியே இருந்து சிந்தனையில் ஆழ்ந்தார். -

"முன்னே வினையால் இந்தப் பிறவிக்கு மூலமான வளிடம் நான் சார்வதற்கு நீ திருவுள்ளம் கொண்டருள வேண்டும். எம்பெருமானே, இந்த இரவில் அவளிடம் ே சென்று அவளுடைய புலவியை நீக்கினல் கான் உய்வேன்; வேறு செயல் இல்லே' என்று அவர் இறைவனை எண்ணித் துதித்து மறுகினர். - -

தன்னுடைய தோழருடைய வருத்தத்தைக் காணச் சகி யாத எம்பெருமான், அடிகள் கிலத்தில் தோயச் சுந்தரர் முன் எழுந்தருளினன். சுந்தரர் தாங்க இயலாத மகிழ்ச்சி யோடு, உடம்பெல்லாம் புளகம் போர்ப்ப, கையைத் தலை மேற் குவித்துப் பின் இறைவன் அடித்தாமரையில் விழுங் தார்; எழுந்தார்.

அவ்வன்பரைப் பார்த்து இறைவன், "உனக்கு வந்த துன்பம் யாது?’ என்று கேட்க, ‘எம்பெருமானே, அடி யேன் புரிந்த குற்றத்தினிடையே அடியேனே ஆழ்ந்து துன் புறுகிறேன். தேவரீரே என்னை எடுத்து ஆட்கொள்ள வேண்டும். தேவரீருடைய திருவருளால் திருவொற்றி யூரில் சங்கிலியை மணம் புரிந்து கொண்டேன். அதனைப் பரவை அறிந்து தன் பால் கான் வந்தால் உயிர்விடுவேன் என்று சொல்லிக் கோபத்தோடு இருக்கிருள். நான் தேவரீருக்கு அடியேன் அல்லவா? எனக்குத் தாயைவிடச் சிறந்த தோழர் நீர் அல்லவா? அறிவையும் இழந்து வருந் தும் எனக்கு இவ்விரவே தேவரீர் சென்று பரவையின் ஊடலைத் தீர்த்தருள வேண்டும்" என்று உருகி வேண்டினர் சுந்தரர். - *

‘'நீ துன்பத்தை விடு. இப்பொழுதே உனக்குத் தாதனுகப் பரவையிடம் போகின்ருேம்" என்று வாய் மலர்ந்தான் இறைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/68&oldid=585808" இலிருந்து மீள்விக்கப்பட்டது