பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 61

சங்கிலியாரை மணந்து கொண்டு வாழ்கிருர் என்ற செய்தியை உணர்ந்து அப் பிராட்டியார் சினம் கொண்டார். அதனைப் பொருமல் நெஞ்சம் தளர்ந்தார். இரவு சயனத்திற் படுத்துத் துயிலுவதில்லை. விழிப்போடு இருந்தாலும் அமைதி பெறுவதில்லை. ஏதேனும் ஆதினத்தில் சிறிது நேரம் பொருந்தி இருப்பதில்லை. ஒரே சிலையில் விற்பதும் இல்லை. வெளியிற் செல்வதும் இல்லை. சுந்தரமூர்த்தி யாரை மறக்கவும் முடியவில்லை; சினேக்கவும் முடியவில்லை. வாய்விட்டுத் தம் துயரத்தைச் சொல்லவும் இயலவில்லை. அவருக்கு உண்டான புலவியும் பிரிவுத் துன்பமும் அவருடைய என்பூடு கின்று உருக்கின.

இந்த கிலேயில் பரவையார் இருக்க, தேவாசிரய மண்டபத்தை அணுகிய சுந்தரர் பரவையாரிடம் பரிசனங்களை அனுப்பினர். அவர்கள் வழக்கம்போல் பரவையார் திருமாளிகையுட் புகப் போகும்போது அவர் களால் உள்ளே போகமுடியவில்லை; வெளியில் நின்ருர்கள். அவரிற் சிலர் நாயனரை அடைந்து, 'திருவொற்றியூரில் நிகழ்ந்தவற்றை யெல்லாம் அறிந்து அங்குள்ளார் எங்களே உள்ளே விடவில்லை” என்று தெரிவித்தார்கள். -

அதனைக் கேட்ட சுந்தரர் மனம் வருக்தி அதற்கு என்ன செய்வது என்று எங்கினர். அப்பால் சிறந்த உலகியலறிஞர் சிலரைப் பரவையாரிடம் அனுப்பிச் சமாதானம் செய்யச் சொன்னர். அவர்கள் பரவையாரிடம் போய்ப் பல நியாயங்களே எடுத்துரைத்து அவர் சினத்தை மாற்ற முயன்ருர்கள். அவரோ சிறிதும் மனம் இசையாமல், "அவர் திறத்தில் இனி நீங்கள் ஏதாவது பரிந்து பேசிளுல் என் உயிர் நீங்கும்” என்று சொல்லவே, போனவர்கள் அதனைக் கேட்டு அஞ்சி வந்துவிட்டார்கள். நிகழ்ந்ததை அவர்கள் காவலூர் நம்பியிடம் சொல்ல, அவர் மிகவும் சோர்வுற்று வருக்கினர். உள்ளத்தில் மிக்க கவலையோடு கள்ளிரவில் துயிலின்றித் துன்புற்ருர். அருகில் உள்ளவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/67&oldid=585807" இலிருந்து மீள்விக்கப்பட்டது