பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாயன்மார் கதை

விண்ணப்பம் பலிக்காமல் போனதை அறிந்து வருந்தி, மேலும் தம் யாத்திரையைத் தொடர்ந்தார் வன்ருெண்டர். திருவாலங்காங்காட்டையும் திருவூறலேயும் பணிந்து காஞ்சிபுரம் சென்று அடைந்தார். அங்கே ஏகம்பகாதனே வணங்கி உருகி கிற்கும்போது, அவருக்கு இடக்கண் பார்வை தெரிந்தது. நன்றியறிவுடன் ஏகம்பனேப் பாடி அங்கே சில காலம் தங்கினர். அங்கிருந்து புறப்பட்டுப் பல தலங்களே அடைந்து பணிந்து, சோழநாட்டில் உள்ள திருத்துருத்தியை வழிபட்டார். அங்கே அவர் மேனிமேல் இருந்த பிணி நீங்கியது. ஒற்றைக் கண்ணுடன் திருவாரூரை நோக்கிச் சென்ருர்,

திருவாரூர் அணுகியது. நெடுந்துாரத்தில் அதைக் கண்டவுடன் கீழே விழுந்து பணிந்து எழுந்தார். அதன் முழு அழகையும் ஒற்றைக் கண்ணுல் காணமுடியாமல் தவித்தார். திருவாரூருக்குள்ளே புகுந்து பரவையுண் மண்டளி என்னும் திருக்கோயிலைப் பணிந்து, வன்மீகநாதர் கோயிலை அடைந்து, புற்றிடங்கொண்ட புராதனரை ஆராக் காதல் மீதுTரப் பணிந்தார். வலக்கண் பார்வையை யும் தரவேண்டுமென்று கரைந்து புலம்பிப் பாடினர்.

கருணுகிதியாகிய இறைவன் அவருடைய வேதனேக்கு இறங்கி, மற்றக் கண்ணேயும் கொடுத்தருளினன். இரு கண் பார்வையும் தெளிவாகப் பெற்ற நம்பியாரூரர் பரவச மாக வின்ருர்; விழுந்தார்; எழுந்தார்; பாடினர். பின்பு கேர்யிலே வலமாக வந்தார்; அடியார்கள் கூடியிருந்த தேவாசிரிய மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.

பரவையால் துTது

சிந்தர மூர்த்தி நாயனர் பரவையாரைப் பிரிந்து சென்ற பிறகு அவருடைய பிரிவில்ை பரவையார் மிக வருங் தி னர். அவர் திருவொற்றியூரை அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/66&oldid=585806" இலிருந்து மீள்விக்கப்பட்டது