பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்ந்தி நாயனுர் 59

பாகத் திருவாரூரில் திருவிழா நடைபெறும். விதிவிடங்கப் பெருமானுடைய திருவோலக்கத்தில் பரவையார் ஆடலும் பாடலும் நடைபெறும். இவை இப்போது சுந்தரமூர்த்தி யார் கினேவில் வந்து தோன்றின. 'திருவாரூர்ப் பெருமானே மறந்து இங்கே இருந்துவிட்டேனே' என்ற வருத்தம் உண்டாயிற்று. திருவாரூர் சென்று எம்பெருமானத் தரிசிக்கவேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் முதிர்ந்து வந்தது. ஒருநாள் திருவொற்றியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வணங்கி எழுந்து திருவாரூருக்குப் புறப்பட்டு விட்டார்.

சபதத்தை முறித்துவிட்டதல்ை திருவொற்றியூர் எல்லையைக் கடந்தவுடனே அவருடைய கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன. 'சங்கிலியைப் பிரிந்து செல்ல மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு இப்போது பிரிந்து வருவதனால் இந்தத் துன்பம் வந்தது. இது நீங்கும் பொருட்டு ஒற்றியூர்ப் பெருமானைப் பாடுவேன்' என்று. எண்ணி, மனம் உருகி, கண் தரவேண்டும் என்று ஒரு பதிகம் பாடினர். பாடியும் கண் தெரியவில்லை. திருவாரூரை நோக்கிச் சென்ற அவர், வழியிலே செல்பவர் கள் வழிகாட்ட மெல்ல மெல்லப் போனர். திருமுல்லே வாயில் சென்று இறைவனே வழிபட்டுப் பதிகம் பாடினர். பின்பு வெண்பாக்கம் என்ற தலத்தை அடைந்தார். அங்கே இறைவனே வருந்தி, நீர் கோயிலில் உள்ளிரோ?” என்று பாட, அவன் ஊன்றுகோல் ஒன்று அருளி, அயலாரைப் போல, உளோம், போகீர்’ என்று அருளி அனுப்பிவிட்டான்.

சத்தியம் பிறழ்ந்தவர்கள் எவ்வளவு சிறந்தவர்களான லும் துன்புறுவார்கள் என்ற உண்மையை இறைவன் சுந்தரமூர்த்தியார் வாயிலாக உலகுக்கு அறிவிக்க எண்ணின்ை போலும் வெண்பாக்கத்திலும் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/65&oldid=585805" இலிருந்து மீள்விக்கப்பட்டது