பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நாயன்மார் கதை

அங்கே வந்து சேர்ந்தார். அவர் சங்கிலியாரை அணுகி இறைவன் அருளியதைச் சொல்ல, காணத்துடன் கின்ற அம் மங்கை கல்லார் கோயிலுள்ளே புக, அவருடன் சுந்தரரும் உட்புகுந்தார். "நான் உன்னைப் பிரியமாட் டேன் என்ற உறுதிமொழியை இறைவன் திருமுன் மொழிய எண்ணுகிறேன்; அங்கே வருக' என்று சுந்தரர் கூற, சங்கிலியாருடைய கனவைக் கேட்டிருந்த தோழிமார், "இதன்பொருட்டு இறைவன் முன்போய்ச் சபதம் செய் வது தகாது; மகிழமரத்தின் கீழே இருந்து செய்தால், போதும்' என்று சொன்னர்கள். சுந்தரர், "நாம் மறுத்தால் நமக்குப் பழியாகும்' என்று எண்ணி அவ்வாறே செய்வதாக இசைந்தார்.

யாவரும் மகிழமரத்தை அடைந்தார்கள். தம்பிரான் தோழர் அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, 'உன்னை கான் பிரியேன்” என்று சபதம் செய்து கொடுத் தார். சங்கிலியார் தம் தொண்டிலே ஈடுபட்டார். சுந்தரர் இறைவன் முன் சென்று அவனுடைய திருவருளே எண்ணி வாழ்த்தினர்.

அன்று இரவே, இறைவன் சிவனடியார்களுடைய கனவில் தோன்றி 'நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலியை நம்முடைய ஏவலினல் மணம் புரிவிப்பீர்களாக!' என்று கட்டளேயிட்டான். அவர்கள் விடிந்து எழுந்து ஒருவருக்கு ஒருவர் தாம் கண்ட கனவைச் சொல்லிக் கொண்டு, சுந்தரரை அணுகிப் பணிந்து இறைவன் இட்ட கட்டளையைச் சொன்னர்கள். பின்பு அவர்கள் சுந்தர மூர்த்தியாருக்கும் சங்கிலியாருக்கும் சிறப்பாகத் திருமணத்தை நிறைவேற்றினர்கள். அவ்விருவரும் இறைவன் திருவருளில் மனம் ஒன்றி இணைந்து வாழ்ந்து வகதாாகள. -

சில நாட்கள் சென்றன. அப்பால் வசந்தமென்னும் இளவேனிற் பருவம் வந்தது. அக் காலத்தில் மிகச் சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/64&oldid=585804" இலிருந்து மீள்விக்கப்பட்டது