பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 57

சபதத்தை அவன் செய்யும்படி செய்கிறேன்” என்று கூறி மறைந்தான். -

சுந்தார்பால் சென்று, "உன்னே மணம் புரிந்து கொள்ளும்படி சங்கிலியிடம் சொன்னுேம். அவள் உன் ல்ை ஒரு காரியம் ஆகவேண்டும் என்று சொன்னுள்" என்று இறைவன் கூறினன். "நான் செய்ய வேண்டியது யாது?’ என்று சுந்தரர் கேட்க, 'இன்று இரவே அவள் முன்பு, உன்னே விட்டு நீங்கமாட்டேன் என்று ஒரு சபதம் செய்து தரவேண்டும்' என்று இறைவன் திருவாய் மலர்க் தான்.

அதுகேட்ட சுந்தரர் சற்றே மயங்கினர். எம்பெரு மான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களுக் கெல்லாம் செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்துக்கு இது ஒரு தடையாக இருக்கும்போல் இருக்கிறதே! என்று எண் னிக் கவன்றவர், பின்பு இதற்கு ஒரு தந்திரம் செய்யலாம் என்று துணிந்தார். இறைவனே நோக்கி, எம்பெரு மானே, தேவரீருடைய சங்கிதியில் அவளுடன் வந்து சபதம் செய்கிறேன். ஆளுல் அந்தச் சமயத்தில் தேவரீர் கோயிலில் உள்ள மகிழ மரத்துக்குச் சென்று எழுந்தருளியிருக்க வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொண்டார். இறை வன் அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டான்.

ஆனல் மீண்டும் அப்பெருமான் சங்கிலியாரிடம் சென்று, "நாவலாரூரன் நம்முடைய சங்கிதியில் சபதம் செய்து தருகிறேன் என்பான். நீ அதற்கு இசையாமல் மகிழ மரத்தின் அடியில் செய்து தரச்சொல்' என்று அருளி மறைந்தான். சங்கிலியார் தாம் கனவிலே கண்ட வற்றை யெல்லாம் தோழிமாரிடம் சொல்ல, அவர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டார்கள்.

புலரும் பொழுது ஆயினமையின் சங்கிலியார் திருக் கோயிலுக்குத் தோழிமாருடன்செல்ல,சுந்தரரும் அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/63&oldid=585803" இலிருந்து மீள்விக்கப்பட்டது