பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. - நாயன்மார் கதை

ஒரு நாள் சங்கிலியார் மாலை தொடுத்து அதனை இறைவனுக்கு அணியும்படி கொடுப்பதற்குத் திரையை விலக்கி வெளியே வந்தார். அப்போது அங்கே வந்த வன்ருெண்டர் சங்கிலியாரைக் கண்டார். முன்பு இறை வன் பணித்த விதியினல், சுந்தரமூர்த்தியின் உள்ளம் அந்த மங்கை கல்லார்பால் சென்று பதிந்தது. அவர் தம் திருப் பணியை நிறைவேற்றிக் கன்னிமாடம் புகுந்தார்.

சங்கிலியார் இன்னர் என்பதை விசாரித்து அறிந்த சுந்தரரருக்கு, அவர்மேல் காதல் முதிர்ந்தது. திருவொற்றி யூர்ப் பெருமான்முன் சென்று வணங்கி, எம்பெருமானே, ஒருபால் உமாதேவியாரை வைத்து மகிழ்கின்றது போதா மல், மணிமுடியின்மேல் கங்கையை மறைத்து வைத் திருக்கும் காதரே, தேவரீருக்கு மாலை கட்டி என் உள்ளத் திண்மையைக் கட்டுக்குலைத்த சங்கிலியை எனக்கு அருளி என் துன்பத்தைப் போக்கி யருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

இறைவன் அவருக்கு அவ்வாறே செய்வதாக அருளி ன்ை. பிறகு சங்கிலியார் கனவிலே தோன்றி, தவம் மிக்க சங்கிலியே, என்னிடம் மிக்க அன்புடையவனும், மேருவைப் போன்ற தவமுடையவனும், வெண்ணெய் கல்லூரில் கம்மால் ஆட்கொள்ளப்பட்டவனும் ஆகிய காவலாரூசன் உன்னை அளிக்க வேண்டும் என்று நம்மை இரங்தான். நீ அவனை மணந்து கொள்வாயாக’ என்று வாய்மலர்ந்தான். சங்கிலியார் இறைவனைத் தொழுது, “எம்பிரானே, தேவரீர் அருளிச் செய்த அவருக்கு உரியவ ளாக ஆவேன். ஆனல் ஒரு செய்தியை அடியேன் விண் ணப்பம் செய்துகொள்ள விரும்புகிறேன். அந்தத் தொண்டர் தலைவர் திருவாரூரிலே மகிழ்ந்து தங்குபவர் என்பதைத் தேவரீர் அறிவீர்களே!” என்று காணத்துடன் கூறினர். இறைவன், "உன்னை விட்டு நீங்கமாட்டேன் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/62&oldid=585802" இலிருந்து மீள்விக்கப்பட்டது