பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 55:

ராகிய அகிந்திதையார் ஞாயிறுகிழாரின் புதல்வியாகத் தோன்றி வளர்ந்து வந்தார். அழகும் பண்பும் தெய்வப் பொலிவும் பெற்று விளங்கிய அவர் மணப் பருவத்தை அடைந்தார். அதுகண்டு தாய் தங்தையர், 'இவளுக்கு ஏற்ற கணவனேத் தேட வேண்டும்' என்று பேசிக் கொண் டனர். அதை அறிந்த புதல்வியாகிய சங்கிலியார், "சிவ பெருமானுடைய அருள்பெற்ற ஒருவரையன்றி வேறு யாரையும் நான் மணம் புரிந்து கொள்ளேன்' என்று சொல்லி விட்டார். அதுமுதல் தாய்தங்தையர் தாமாக எந்த முயற்சியும் செய்வதை விட்டு விட்டார்கள். இந்தச் செய்தி வேறு யாருக்கும் தெரியாது.

யாரோ ஒருவன், சில உறவினரை மணம் பேசும்படி ஞாயிறு கிழாரிடம் அனுப்பினன். வந்தவர்களிடம் அவர் பக்குவமாகச் சொல்லி அவர்களுக்கு இணங்காமையைக் குறிப்பால் தெரிவித்து அனுப்பிவிட்டார். மணம் பேச வந்தவர்கள் திரும்பிப் போனபோது, அவர்களே விடுத் தவன் இறந்தான். 'இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள கினேப்பவருக்குத் திங்கு நேரும் என்ற எண்ணம் இந்த நிகழ்ச்சியால் யாவருக்கும் உண்டாகிவிட்டது. சங்கிலியார், நான் ஒற்றியூர் இறைவன் திருத்தொண்டு புரிந்து காலம் கழிப்பேன்" என்ருர். -

தாய் தங்தையர் சங்கிலியாரின் விருப்பப்படியே திருவொற்றியூரில் ஒரு கன்னிமாடம் கட்டுவித்து, அங்கே அவரை உறையும்படி செய்தனர். வேண்டிய வசதிகளே யெல்லாம் அமைத்து, அவருடன் சில தோழிமாரையும் இருக்கச் செய்தனர். சங்கிலியார் திருவொற்றியூர்க் கோயிலில் மலர் தொடுக்கும் மண்டபத்தில் திரை இட்டுக் கொண்டு, மாலே தொடுத்து எம்பெருமானுக்கு வழங்கி வந்தார். பஞ்சாட்சர ஜபம் செய்து கொண்டே மாலே தொடுத்து வந்தார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/61&oldid=585801" இலிருந்து மீள்விக்கப்பட்டது