பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நாயன்மார் கதை

முதுவாய் ஒரி கதற முது காட்

டெரிகொண் டாடல் முயல்வானே

மதுவார் கொன்றைப் புதுவி சூடும்

மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்

கண்டால் அடியார் கவலாரே? அதுவே யாமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே? திருக்கச்சூரிலிருந்து காஞ்சீபுரம் சென்று ஏகம்பனை வணங்கி, அங்குள்ள வேறு பல கோயில்களையும் வழி பட்டுப் பின்பு வன்பார்த்தான் பனங்காட்டுர், திருமாற் பேறு, திருவல்லம் என்னும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்காளத்தியை அடைந்தார். கண்ணப்பருக்கு அருளிய காளத்தியப்பரை வணங்கிச் சில நாள் அங்கே தங்கினர். அங்கிருந்தபடியே பூரீ சைலமாகிய திருப்பருப் பதத்தையும், திருக்கேதாரத்தையும் மனத்தால் இறைஞ் சித் திருப்பதிகம் பாடினர். சிலநாள் கழித்து அங்கிருந்து புறப்பட்டுத் திருவொற்றியூரைச் சென்று அடைந்தார்.

கண் இழந்து மீளப் பெறுதல்

திருவொற்றியூரை அடைந்த சுந்தரர் திருக்கோயில் சென்று எழுத்தறியும் பெருமானே வணங்கிப் பதிகம் பாடினர். அந்தத் தலத்தில் தங்கி அவ்வப்போது இறை வசீனத் தரிசித்து இன்புற்று வந்தார்.

திருவொற்றியூருக்கு அருகில் ஞாயிறு என்ற ஊரில் ஒரு வேளாண் செல்வர் இருந்தார். அவரை யாவரும் ஞாயிறு கிழார் என்று அழைப்பர். திருக்கயிலையில் உமா தேவியாருக்குத் தொண்டுபுரியும் மங்கையர் இருவரில் ஒருவர் திருவாரூரில் பரவையாராகப் பிறந்து சுந்தரரை மணந்தார் என்பதை முன்பு கண்டோம். மற்ருெருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/60&oldid=585800" இலிருந்து மீள்விக்கப்பட்டது