பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 53

அருள் பெற்றுத் தொண்டைநாட்டுத் திருப்பதிகளேத் தொழும் ஆர்வம் உடையராகிப் புறப்பட்டார்.

இடையில் உள்ள பல இடங்களேக் கடந்து திருக்கழுக் குன்றை எய்தி, இறைவனே வணங்கித் திருப்பதிகம் பாடினர். அங்கிருந்து திருக்கச்சூர் என்னும் தலத்தை அணேந்தார். அங்குள்ள கோயிலுக்கு ஆலக்கோயில் என்று பெயர். அத் திருக்கோயிலுக்குள் சென்று சிவ பெருமானே வணங்கிப் புறத்தே வந்தார். அப்போது உணவு கொள்வதற்குரிய சமயமாக இருந்தது. சுந்தரருடன் அமுது சமைப்பதற்காக வரும் பரிசனங்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஆகையால் பசியினல் வருந்திய அவர் கோயிலின் மதிற்புறத்தே அமர்ந்திருந்தார்.

அவர் பசித்திருப்பதைப் பொருத இறைவன் ஓர் அந்தணக் கோலம் கொண்டு, கையில் ஒரு வெற்ருேட்டை எந்தியபடி வந்தான். சுந்தரரை அவன் அணுகி கோக்கி, "நீர் பசியினல் மிகவும் சோர்வுற்றிருக்கிறீர். நான் இப் போது இவ்வூரில் அன்னப்பிட்சை எடுத்துவந்து உமக்கு அளிக்கிறேன். வேறு எங்கும் போகாமல் சிறிது நேர' இங்கே இரும்” என்று சொல்லிப் பிட்சை வாங்கப் புறப் பட்டான். வீதியில் உள்ள வீடுதோறும் சென்று பிட்சை வாங்கிக்கொண்டு வந்து சுந்தரருக்கு வழங்கினன். வந்த மறையவரைத் தொழுது, அவர் தந்த உணவைச் சுந்தரர் உண்டு மகிழ்ந்தார். அப்போது இறைவன் அவர் அறி யாதபடி மறைந்தருளினன்.

வந்த மறையவர் இறைவனே என்பதை அறிந்து, "எளியேன் பொருட்டாகத் தன் சேவடி வருந்த எழுந்தருளி விடுதோறும் இரந்து உணவு அருத்திய இறைவன் பெருங் கருணை இருந்தவாறு என்னே' என்று உருகி ஒரு திருப் பதிகம் பாடத்தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/59&oldid=585799" இலிருந்து மீள்விக்கப்பட்டது