பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாயன்மார் கதை

இருந்து பசியாற உண்டார். அவருடன் வந்த பல தொண் டர்களும் உண்டு, மேலும் அங்கே பசியுடன் வந்தவர் களும் உண்ணும் அளவுக்கு அந்தக் கட்டுச் சோறு கிரம்ப இருந்தது. உணவு கொண்டு இனிய தண்ணிரை யும் பருகிய சுந்தரர், அயர்ச்சியினல் அந்தப் பந்தலிலேயே துயிலலானர். அருகில் இருந்த யாவரும் துயில் கொண் டார்கள். அப்போது சிவபெருமான் தான் உண்டாக்கிய பக்தலோடு தானும் மறைந்தருளினன். *

துயின்ற காவலூரர் எழுந்து பார்க்கும்போது * தண்ணிர்ப் பந்தலையும் காணவில்லை; வேதியரையும் காண வில்லை. இறைவன்தான் இவ்வாறு செய்தான் என்று உணர்ந்து விம்மிதமுற்று,

இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினே மனிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.

எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினர். பாடிய படியே திருக்குருகாவூர் சென்று திருக்கோயிலே அடைந்து சிவபெருமானைப் பணிந்து இன்புற்ருர். அங்கே சில நாள் தங்கிப் பிறகு திருக்கழிப்பாலேயைத் தரிசித்துக்கொண்டு தில்லையை அடைந்தார்.

அங்கே திருவீதியைப் பணிந்து புகுந்து, மன்றுள் எடுத்த சேவடியை இறைஞ்சிச் சிலநாள் அங்கே தங்கி னர். அப்பால் திருத்தினோகர் சென்று இறைவனே வணங்கித் திருகாவலூரை அடைந்தார். -

சுந்தரர் வருகையை அறிந்து அவ்வூரினர் ஊரை அலங் கரித்து எதிர்கொண்டுவந்து அழைத்துச் சென்றனர். காயனர் திருக்கோயிலுக்குள் சென்று பரமனே வணங்கிப் பதிகம் பாடினர்; அங்கே சிலநாள் தங்கி இறைவன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/58&oldid=585798" இலிருந்து மீள்விக்கப்பட்டது