பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் $1

அமைந்த திருப்பதிகத்தைப் பாடினர். அதன் முதற் பாசுரம் வருமாறு.

ஊர்வ தோர்விடை ஒன்று டை யானே

ஒண்ணு தில் தனிக் கண்ணுத லானேக் கார தார்கறை மாமிடற் ருனேக்

கருத லார்புரம் மூன்றெரித் தானே நீரில் வாளை வரால்குதி கொள்ளும்

நிறைவு னற்கழ னிச்செல்வம் நீடுர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற

பரம னேப்பணி யாவிட லாமே ?

திருடுேரினின்றும் புறப்பட்டுச் சில தலங்களைப் பணிந்து, சீகாழியை வலமாக வந்து இறைஞ்சித் திருக் குருகாவூர் என்னும் பதியை அடையச் சென்ருர், அப்போது அவருக்குப் பசியும் தாகமும் மிகுதியாக இருந்தன. அதனே உணர்ந்த இறைவன் அவர் வரும் வழியில் தண்ணிரும் பொதிசோறும் கொண்டு சென்ருன். ஒருபால் குளிர்ந்த பந்தலை அமைத்து, ஒரு வேதியரைப் போன்ற திருக்கோலத்தை மேற்கொண்டு அங்கே தங்கி யிருந்தான்.

திருக்குருகாவூர் இறைவன் இவ்வாறு சுந்தரர் வரவு பார்த்து இருக்க, தம்பிரான் தோழர் பல தொண்டர் களுடன் அவ்வழியே வந்தவர், அந்தப் பக்தருக்குள் நுழைந்து ஆர்வத்துடன் அங்கிருந்த வேதியருடன் பேசி னர். அப்போது வேதியராக வக்திருந்த இறைவன், 'நீங்கள் மிகவும் பசித்திருக்கிறீர்கள். அது திரும்படி நான் கொண்டுவந்திருக்கும் கட்டமுதைத் தருகிறேன். காலம் தாழ்த்தாமல் அதை உண்டு, குளிர்ந்த தண்ணிரை யும் குடித்து இளேப்பாருங்கள்” என்ருன். -

அது கேட்ட சுந்தரர் அதற்கு இசைந்து, பெருமான் தந்த கட்டமுதைப் பெற்று உடன் வந்த தொண்டருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/57&oldid=585797" இலிருந்து மீள்விக்கப்பட்டது