பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 . நாயன்மார் கதை

பூத்தா ருங்குழலாள்

பர வையிவள் தன்முகப்பே கூத்தா கந்தருளாய்

கொடி யேனிட்ட ளம்கெடவே என்ற ஒன்பதாம் பாட்டைப் பாடியவுடன் அவருக்குப் பொன் தட்டுப்பட்டது. அதை எடுத்துக் கரைக்குக் கொண்டு வந்தார். அங்கே இருக்தவர் யாவரும் அதிசயித் தார்கள். பொன்னே உரைத்துப் பார்த்தபோது, இறைவன் மறுபடியும் அவர் பாட்டை விரும்பிச் சற்றே மாற்றுத் தாழும்படி காட்டுவித்தான். சுந்தரர் மறுபடியும் இறை வனே வழுத்த, அவருடைய பாட்டை உவந்து ஆனந்தக் கூத்தையும் உவந்த பெருமான் தக்க மாற்றுடைய பொன் ளுக்கிக் காட்டினன். அதனேக் கணக்கிட்டு நிறை குறை யாமல் இருப்பதைக் கண்டு மனங் குளிர்ந்தார் நாவலாரூரர். பொன்னத் திருமாளிகைக்குக் கொண்டு சென்றனர். பரவையாருடன் இறைவனேத் தொழுது உருகினர்.

சோறு அளித்த கருணை

சுந்தரமூர்த்தி நாயனர் திருவாரூரில் இருந்தபடியே சுற்றிலுமுள்ள பல தலங்களுக்குச் சென்று சிவபெருமான வழிபட்டு வந்தார். திருநள்ளாறு, திருக்கடவூர் வீரட் டம், திருக்கடவூர் மியானம், திருவலம்புரம், திருச்சாய்க் காடு, திருவெண்காடு, திருகனிபள்ளி, திருச்செம்பொன் பள்ளி, திருகின்றியூர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசித்தார். திருகின்றியூரிலிருந்து புறப்பட்டுச் சீகாழியை நோக்கிச் செல்பவர், இடையில் உள்ள டுேரைப் பணியாமல் போளுர். இடையிலே அப்பதியின் வினேவு எழவே, மீண்டு அத் தலத்தை நாடிச் சென்ருர். இறைவனைப் பணிக்து, "ேேரில் எழுந்தருளி யிருக்கும் பரமனைப் பணி யாமல் விடலாமா?" என்ற வி,ை ஒவ்வொரு பாடலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/56&oldid=585796" இலிருந்து மீள்விக்கப்பட்டது