பக்கம்:நாராயணன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நீ பள்ளிக்கூடத்துக்கு வந்த போதானது மணி யடிப்பதற்கு முன்பாவது உன் சட்டை பையே தொட்டு பார்த்தாயா?" "நான் அவ்விதம் பார்த்தாக எனக்கு நினைவில்லை.பார்க்கவில்லை என்றே சொல்லலாம்." "அது போகட்டும்க உனக்கு யார்மீதேனும் சந்தேகம் தோன்றுகிறதா?” அப்போது மாணிக்கத்தின் மனம் திடுக்கிட்டது. அவன் எங்கே தன்னைச் சொல்லிவிடுகின்றானோ என்று நாராயணனை பார்த்துக்கொண்டிருந்தான். நாராயணன் சிறிது நேரம் விழித்தப்பிறகு." ஐயா எனக்கு ஒருவர் மீதும் சந்தேகம் இல்லை.நான் எப்படி ஒருவர் மேல் வீணாக சந்தேகப்படுவது." அப்போது ஆசிரியர், 'அது போகட்டு'உன் சட்டை பையே இன்னும் நன்றாக் தடவிப்பார் என் கைக்கடிகாரமும் அகப்படுகின்றதா,"என்றார்.

42
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/45&oldid=1340132" இலிருந்து மீள்விக்கப்பட்டது