பக்கம்:நாராயணன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆரவாரம் ஆசிரியருக்கு மேலும் மேலும் சந்தேகத்தையே விளைவித்தது. ஆனாலும் தக்க காரண மில்லாமல் அவன் மீது எவ்வாறு பழி சுமத்துவது என்று அவர் அஞ்சினார்.
இவ்வாறு நெடுநேரம் பலரையும் விசாரித்த பிறகு அவர் மறுபடியும் நாராயணனிடமே வந்தார்.
"நாராயணா, நான் வெளியே போனபோது உன்னோடு யார்யார் இருந்தனர்?"
" ஐயா , நான் தாங்கள் வெளியே போனதைக் கவனிக்கவே யில்லை.”
“என் அறையில் யாரேனும் நுழைந்ததாக உனக்குச் சத்தம் கேட்டதா?"
நாராயணன் சிறிது யோசித்து, "ஐயா, அவ்வாறு சத்தம் கேட்டதாகவும் எனக்கு நினைவில்லை, என்றான்."
பிறகு ஆசிரியர் ஏதோ சிறிது யோசித்தார். உடனே அவர் நாராயணனைத் தம் அறைக்கு அழைத்துச்சென்றார். 'உபாத்தியாயர் நாராயணனைத் தண்டிக்கவே அழைத்துச்

44
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/47&oldid=1340253" இலிருந்து மீள்விக்கப்பட்டது