பக்கம்:நாராயணன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்லுகின்றார்',என்று பிள்ளைகள் எல்லோரும் நினைத்தார்கள். நாராயணனும் அவ்வாறே எண்ணினான் ஆனால் அவன் தண்டனைக்கு அஞ்சவில்லை;தன் மீது அநியாயமாகப் பழிநேர்வதைக் கருதியே வருந்தினான்.

  நாராயணனை உள்ளே அழைத்துச் சென்றதும், அந்த ஆசிரியர் மற்றும் ஒரு முறை அவன் முகத்தை உற்று நோக்கினர்.அவன் அப்போதும் கள்ளம் கபடம் முதலியன அற்றவனாகவே விளங்கினான்.
 பிறகு அவர், “நாராயணு, நான் உன்னைச் சில கேள்விகள் கேட்பதற்காகவே இங்கே அழைத்து வந்தேன்; உனக்கு மாணிக்கத்தின் மீது சந்தேகம் தோன்றுகின்றதா?” என்றார்,
 நாராயணன் சிறிது நேரம் சிந்தனை செய்து பிறகு "ஐயா எனக்குத்தோன்றவில்லை;ஆனால் அவனும் என்னுடன் இன்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான்”,என்றான்.
             45
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/48&oldid=1340255" இலிருந்து மீள்விக்கப்பட்டது