பக்கம்:நாராயணன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உட்கார்ந்தார். அப்போது அவரது மேற்சட்டைப்பையில் கடிகாரம் இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். 'நாராயணன்தான் அதைத் திருடி வைத்திருந்து பிறகு கொடுத்திருக்க வேண்டும்,' என்று சிலர் எண்ணினார்கள். சிலர், அது அவ்வறையிலேயே அகப்பட்டிருக்க வேண்டும்,' என எண்ணினர். அவ்விதம் அவர்கள் பலப்பல விதமாகப் பேசிக்கொள்ளலாயினர்.
ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும் நாராயணனைப் பார்த்துப் புன்னகை செய்தார். அப்போது நாராயணன் சிறிது சிரித்துப் பின்னர் நாணத்தால் தலைகுனிந்தான். அப்போது பிள்ளைகள் ஒன்றும் தெரியாமல் விழித்தனர்.
பிறகு அவர், 'மாணிக்கம் எங்கே?” என்று நாராயணனைக் கேட்டார்.
“அவன் இங்கே வருவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டிலேயே இருக்கலாம்,' என்று நாராயணன் உரைத்தான்.

56
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/59&oldid=1340704" இலிருந்து மீள்விக்கப்பட்டது