பக்கம்:நாராயணன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடனே அவர் நாராயணனைப் பார்த்து, "நீ அவனுக்குத் தக்க நன்மதி கூறி அவனை இங்கே அழைத்துவா,” எனறார்.
நாராயணனும் உடனே பாடசாலையை விட்டு விரைந்து சென்றான். அப்போது அவர், தம் கடிகாரம் அகப்பட்ட விதத்தையும், நாராயணன் சட்டைப்பையில் பேனா இருந்த வரலாற்றையும் அப்பிள்ளைகளுக்கு விளக்கமாகக் கூறி மாணிக்கம் வந்தால் அவனை ஒருவரும் ஏளனம் செய்தல் கூடாது என்றும் கட்டளையிட்டார். பிறகு அவர், மாம்பழத்தின் வரலாற்றை அறிவதற்குக் கோவிந்தனைக் கேட்டார். அப்போது அவன், நாராயணன் சொல்லிய யாவும் உண்மை என்றும், தான் அன்று பொய் பேசியதை மன்னிக்க வேண்டும் என்றும் வருத்தத்துடன் கூறினான். அப்போதே கந்தன், முருகன் முதலியவர்களும் அந்த ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
நாராயணனின் சிறந்த குணங்களை அந்த ஆசிரியர் சொல்லக் கேட்ட பிள்ளைகள் யாவரும் மிகவும் ஆச்சரிய


57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/60&oldid=1340731" இலிருந்து மீள்விக்கப்பட்டது