பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நாற்பெரும் புலவர்கள் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன். இவன், கற்றோர்.பால் மிக்க மதிப்புடையவன்; கற்றலையே பெரும்பயனாக எண்ணியவன். இவன் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து பேரறிவினனாய் விளங்கினான், இவ் வரசன் செய்யுள் செய்தலில் வல்லவன். இவன் பாடிய செய்யுள் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அதனை ஆராயின், இவனது மனப்போக்கு நன்கு விளங்கும். “தம்மாசிரியற்கு ஒர் ஊறுபாடு உற்றவிடத்து, அது தீர்வதற்கு வந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும் வழிபாட்டு நிலைமை தவறாது கற்றல் ஒருவற்கு அழகியது; ஏனெனில், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுள் பிறந்தோ ருள்ளும் கல்வி விசேடத்தால் தாயும் மனம் வேறு படும்; வேறுபாடு தெரியப்பட்ட நாற்குளத் துள்ளும் கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின் மேற் குலத்து ஒருவனும் இவன் கீழ்க்குலத்தானென்று பாராது கல்வியின் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவானாதலின், ஒரு குடியின் கட் பிறந்த பலருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடைவோன் சென்ற நெறியே அரசனும் செல்லும்" என்ற கருத்தைக் கொண்ட கொழுவிய பாடலைப் பாடியுள்ளான். கல்விக்குப் பெருமை தரும் பண்புடைய இம்மன்னன், காலத்தில் தமிழ்ச் சங்கம் சிறந்தோங்கி வளர்ந்த தென்பதில் ஐயமென்னை?