பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீத்தலைச் சாத்தனார். 7 மதுரை மாநகரை அடைந்தார் சங்கப் புலவர்கள் அவரது தமிழ் அறிவை ஆராய்ந்து, அவரைத் தங்கள் குழாத்திற் சேர்த்துக் கொண்டனர். அக் கால்த்தில் சாத்தனார் என்ற பெயர் கொண்ட புலவர் பலர் இருந்தனர். நமது சாத்தனார், அவர்களினின்றும் வேறுபடத் தம் ஊர்ப்பெயரைத் தம் பெயரோடு சேர்த்துக் கொண்டனர். எனவே, சீத்தலைச் சாத்தனார் என்று நம் புலவர் வழங்கப் பெற்றார். தமிழாராயும் நேரம் போக எஞ்சிய காலத்தில் சாத்தனார் கூலவாணிகத் தொழிலை நடத்தலா னார்; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி முதலான கூல வகைளை விற்று, இதனால் வரும் பொருளைப் பெற்றுக் காலங் கழித்து வந்தார். இதனால், அவர் மதுரைக் கூல வாணிகன் சாத்தனர் என்றும் வழங்கப்பட்டார். முற்காலத்துப் புலவர்கள் அறிவு வளர்ச்சியின் பொருட்டுக் கல்வி கற்றுச் சீவனோபாயமாக வேறு தொழில்களையும் மேற்கொண்டிருந்தனர் என் பதற்கும் இவரும், அறுவை வாணிகன் இளவேட்ட னார். மருத்துவன் தாமோதரனார். முதலான சங்கப் புலவர்களும், சான்றாவர். முத்தமிழ் வேந்தர் சாத்தனார் மதுரையில் வாழுங்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தவன். பாண்டியன்