பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாற்பெரும் புலவர்கள் சிலம்பை விற்று, அப்பொருளை வாணிக முதலாகக் கொண்டு வியாபாரம் செய்ய விரும்பி உள்ளேன். நீயும் என்னுடன் வருக,' என்றான். கண்ணகியும் அதறகிசைந்தாள். - அன்றிரவின் கடையாமத்தில் இருவரும் புறப் பட்டு, காவிரியின் வடகரை வழியாக மேற்கே சென்று ஒரு பூஞ்சோலையை அடைந்தனர். அங்கு கவுந்தி அடிகள் என்ற சமண முதியாரைக் கண்டு, மதுரை செல்ல இசைந்த அவரையும் உடன் அழைத்துக்கொண்டு மூவரும் மதுரையை நோக்கிச் செல்வராயினர். வழியில் பூரீரங்கம் தென்பட்டது மூலரும் அங்கு வந்த சாரணர் களைத் தரிசித்து, ஓ - மே றிக் காவிரியின் தென்கரை சேர்ந்து, ஒரு பொழிவிலே தங்கினர். அவ்வமயம் கோவலனையும் கண்ணகியையும் ஒரு பரத்தையும், துார்த்தன் ஒருவனும் அவமதித்துப் பேசினான். கவுந்தியடிகள் அவர்களை நரிகளாக்கி ஒரு வருடத்திற் சாபம் தீருவதாகவும் கூறினார். .பின்னர் மூவரும் உறையூரை அடைந்தனர். மூவரும் அன்றிரவு உறையூரின்கண் தங்கியி ருந்து மறுநாட்காலையில் புறப்பட்டனர். புறப் பட்டுச் செல்லுகையில் ஒரு நாள் கோவலன் தனியே நீர் கொண்டுவரச் சென்றான். அப்போது கெளசிகன் என்னும் அந்தணன் ஒருவன் மாதவி -யாக அனுப்பப்பட்டு அங்கு வந்தான். கோவலன், தன் பெற்றோரும் மாதவியும் தன் பிரிவாற்றாது