பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தலைச் சாத்தனார் 23 வடிகளை வேண்டிக்கொண்டார். அவரும் அதற்கு உடன்பட்டார்; கண்ணகி வரலாறு,தமிழ் வேந்தர் மூவர்க்கும் உரியதாதலால், அவள் வரலாற்றை மூன்று கூறாகப் பிரித்தார்; ஒவ்வொரு பிரிவில் உள்ள செய்தியும் அவ்வந்நாட்டுத் தலை நகரில் நடந்தமையின் 'அவ்வப்பெயரை இட்டார்: எனவே, புகாரில் நடந்த வரலாற்றைப் புகார்க் காண்டம் என்னும் பகுதியிலும் மதுர்ை நகரில், நடந்த செய்தியை மதுரைக் காண்டம் என்னும் பகுதியிலும், சேர நாட்டில் நடந்த நிகழ்ச்சியை வஞ்சிக் காண்டம் என்னும் பகுதியிலும் பாடி முடித்தார். சிலம்பு காரணமாக விளைந்த வரலாறு ஆதலின் இளங்கோவடிகள் தாமியற்றிய நூலுக் குச் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டார். அவர் இந்நூல் செய்வதற்கு முக்கிய காரணராக இருந்தவர் நம் புலவர் பெருமான் சாத்தனாரே ஆவர். மாதவி என்னும் நாடகக் கணிகைக்கும் கோவலனுக்கும் மணிமேகலை என்றொரு பெண் பிறந்தாள். கோவலன் கொல்லப்பட்ட செய்தியை உணர்ந்த மாதவி, கணிகைத் தொழிலை அறவே விட்டுப் பிrணி ஆயினள். அவள் மகள் மணிமேகலையும் புத்த மதத்திற் சேர்ந்தாள்: அற வண அடிகள் என்ற ளெபத்த முனிவரிடம் அற வுரைகளைக் கேட்டாள்; அட்சயப்பாத்திரம்