பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 35 படியும். இத்தகைய வளம் பொருந்திய பறம்பு நாட்டைப் பாரி, பாடுவார்க்குப் பரிசிலாக் கொடுத்து விட்டனன். இவனது பரந்த சிந்தையை யும் விரிந்த நோக்கத்தையும் என்னென்பது!" என்றும் தமக்குள் கூறி வியந்தார். பின்னர் ஒருநாள் கபிலர் விறலி ஒருத்தியைச் சந்தித்தார். அவள் விரைவாகச் சென்றுகொண்டி ருந்தாள். கபிலர் அவளை நோக்கி, ஒளி தங்கிய நுதலையுடைய விறலி உயர்ந்த பறம்பு மலையி னது காவலனும், அவனது மலையினது சிகரந் தோறும் இழிதரும் நீரினும் மிக்க இனிய மேன்மை யுடையவனுமான பாரி பக்கலிலே நீ பாடிச் செல்வாய்; அவ்வாறு செல்வாயாயின், எம்மன்னர் பெருமானிடமிருந்து சிவந்த அணியைப் பெறு குவை' என்ற கருத்தைக் கொண்ட பைந்தமிழ்ப் பாவொன்றினைப் பாடி மகிழ்ந்தார். கபிலரும் காரியும் கபிலர் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே திருக்கோவலூர் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு காரி என்னும் சிற்றரசன் ஆண்டு வந்தான். இவன் தமிழ்நாட்டரசர் மூவர்க்கும் ஒவ்வொரு சமயத்து யுத்தத்திலும் உதவி புரிந்த, வன்; புலவர்களைப் பாதுகாத்தவன்; அந்தணர்க்கு நிலங்களை விட்டவன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் சிறந்த படையுடையவன். . . . -